பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாமதகுணலட்சணம்

419

திதி


  
தாமதகுணலட்சணம்(9) = பிரியமின்மை , சோம்பல், உலோபம், கோள்கூறல், தன்னைப் பெரிதாக மதித்தல், உறக்க மிகுதி, கர்வத்தால் வரும் சோம்பல், கேடு செய்தல், மூடத்தனம்

தாயர் (5) = பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய், (அல்லது) தன்னையீன்றாள், அரசன் தேவி, குருவின் தேவி, அண்ணன் தேவி, தன் தேவியை யீன்றாள்.

தானியம்(9) = கோதுமை, நெல், துவரை, பச்சைப் பயிறு, கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்.


தி


திக்கு(8) = கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு.
 
திக்கு(10) = மேற்சொன்னவற்றோடு, மேலுங்கீழுங் கூட்டித்திசை பத்தென்பர்.

திக்குநாகம்(8) = அநந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன்.
 
திக்குப்பாலகர்(8) = எட்டெனத் திசைகள் குறிப்பிட்ட திசைகட்குரிய பாலகர் முறையே, இந்திரன், அக்னி , யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

திக்குயானைகள்(8) = கிழக்காதி முறையே, ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பந்தம், சாரு, வபூமம், சுப்பிரதீபம் (திக்கயங்கள் இவை ஆண் யானைகள்) அப்பிரமை, கபிலை, பிங்களை, அநுபமை, தாமிரபருணி, சுதந்தி, அஞ்சனை, அஞ்சனாவதி, (பெண் யானைகள்)

திணை (5) = குறிஞ்சி, (மலை நாடு) பாலை, (மணல்நாடு) முல்லை, (காட்டுநாடு) மருதம், (வயல்நாடு) நெய்தல், கடல்நாடு)

திதி(15) = பிரமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சட்டி, சத்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி, அல்லது அம்மாவாசியை