பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரவிடம்

420

தேவராடல்


  
திரவிடம் (5) = திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம்

திரவியம் (5) = மலைபடு திரவியம், (மிளகு, அகில், குங்குமம்) காடுபடு திரவியம், (தேன், அரக்கு, மயில் பீலி), நாடுபடு திரவியம், (அரசன், பித்தன், யானை) நகர்படு திரவியம், (நெல், பயறு, கரும்பு, வாழை), கடல்படு திரவியம், (உப்பு பவழம், சங்கு)

திருக்குறள் உரையாசிரியர் (10 ) = தருமர், நச்சர், மணக்குடவர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிமேலழகர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர்.
 
திருமாலவதாரம்(10) = மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலபத்திரன், கண்ணன், கற்கி.
 
திருமாலவதாரம்(15) = அரிபிறப்பு என்ற இடத்துக் காண்க

திருமாலாடல்(4) = அல்லியம், குடம், மல், மரக்கால்

திருமாலாயுதம் (5) = சக்ரம், தனுசு, வாள், தண்டு, சங்கம், (பஞ்சாயுதம்).

தீ


தீவு(7) = நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகு, (சப்ததீவு)

து


துரகக்கதி(5) = மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வானரகதி, விடபக்தி.

தொ


தொழில் = சிருஷ்டி திதி, சம்மாரம், (முத்தொழில்)

தொகைநிலை(8) = இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகை நிலை, பொறை நிலை, நினைதல், சமாதி.
 
தொழில்(5) = படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.
 
தொழில்(6) = உழவு, தொழில், வரைவு, வாணிபம், விச்சை, சிற்பம்.

தே


தேவராடல் (11) = கொடுகொட்டி (திரிபுர தகனத்தின்போது ஆடப்பட்டது) பாண்டரங்கம் (இறைவன், திரிபுர தகனத்தின்போது ஆடியது) குடை, (முருகன் சூரசம்மாரத்தின்போது ஆடியது) துடி, (சூரபதுமர் சம்மாரத்தின் போது ஆடியது)
அல்லியம்