பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேவர்

421

நாடி


  
(கிருஷ்ணன் குவலயாபீடம் என்னும் யானையை அழிக்கும் போது ஆடியது) மல் (வாணாசூரனைக் கொன்றபோது கிருஷ்ணன் ஆடியது) குடம், (கிருஷ்ணன் அநிருத்தனை மீட்க ஆடியது) பாவை, (அவுணர் மயங்கத் திருமகள் ஆடியது) மரக்கால், (துர்க்கை அரக்கர் மயங்க ஆடியது) பேடி, (மன்மதன் தன் மகனை மீட்க ஆடியது) கடை (இந்திராணி வாணன் நகரில் ஆடியது).

தேவர்(33) = சூரியர் 12, உருத்திரர் 11, வசுக்கள் 8, அச்சுவனிதேவர் 2, (முப்பது முக்கோடி தேவர்கள் இவரே)
 

தோ


தோற்றம்(4) = பை, முட்டை , நிலம், வியர்வை

தோற்றம்(2) = சரம், அசரம்



நகர்படுதிரவியம்(5) = கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, யானை, வேந்தன்.
 
நட்சத்திரம்(27) = அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகணி, மிருகசீரிடம், திருவாதிரை, புநர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை , மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி உத்திரட்டாதி, இரேவதி.
 
நதி (7) = கங்கை , யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி, கோதாவரி.
 
நரகம்(7) = அள்ளல், இரௌரவம், கும்பீபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி.

நா


நாகம்(8) = வாசுகி, அனந்தன் தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன்,மகாபதுமன், கார்க்கோடகன்.
 
நாடி (10) = இடை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், சங்கினி, குரு. (தசநாடி)