பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடுபடுதிரவியம்

422

பதினெண்சித்தர்




  
நாடுபடுதிரவியம் (5) = நெல், செவ்விளநீர், சிறுபயிறு, கரும்பு, வாழை.
 
நாட்டில் குற்றம் (7) = தோட்டியர், கள்வர், யானை, பன்றி, விட்டில், கிளி, பெருமழை.

நாட்டில் குற்றம் (7) = ஈதி என்ற இடத்துக்காண்க.

நாற்பொன் (4) = ஆடகம், கிளிச் சிறை, சாதரூபம், சாம்பூநதம்.

நி


நியமம்(10) = தவம், மன மகிழ்ச்சி, கடவுள் நம்பிக்கை, ஈட்டிய பொருளை ஈதல், மூத்தோர்வழிபாடு, உண்மை, நூற்பொருளைக் கேட்டல், கருவமின்மை , பகுத்தறிவு, செபம், விரதம்.
 
நிலம்(4) = குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல்.
 

நூ


நூல்(3) = முதனூல், வழி நூல், சார்புநூல்.
 
நூற்பயன்(4) = அறம், பொருள், இன்பம், வீடு.



பசு( 5) = நந்தை , பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை.
 
பஞ்சபூதம்(5) = பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்)

பஞ்சவாசம்(5) = இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
 
பஞ்சமூலம்(5) = செல்லியம், சித்திரமூலம், கண்டு பரங்கி, பேரரத்தை, சுக்கு.
 
பஞ்சமாபாதகம்(5) = கொலை, களவு, பொய், கள்ளுண்ணல், குருநிந்தை.
 
படைவகுப்பு(4) = அணி, உண்டை , ஒட்டு , யூகம்.
 
பட்சி(5) = வல்லூறு,ஆந்தை, காகம், கோழி, மயில்.
 
பண்( 4) = பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி.
 
பதவி(4) = சாலோகம், (கடவுள் உலகில் வாழ்தல்) சாமீபம், (அருகில் இருத்தல்) சாரூபம், (உருவு பெறுதல்) சாயுச்சியம், (இரண்டற இருத்தல்).
 
பதினெண்சித்தர் (18) = திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர்,