உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தரங்கிணி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

123

தால்...... அப்படிச் சொல்லிக்கொண்டே, அவன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். . . .

"ராஜா கதை மாதிரியல்லவா சங்க்தி சேர்ந்து வருகிறது. காதரீன் தனக்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டாள், 'அவரை உனக்குப் பழக்கமுண்டா? அண்ணு! -

"சுமாரான பழக்கந்தான். சாதாரண குமாஸ்தாவுக் கும், ஏஜண்ட்கிரேடில் உள்ளவருக்கும் நெருக்கம் எப்படி யிருக்க முடியும்? என்று கேட்ட ஜோஸப், நீ எதற்காகக் கேட்கிருய்? என்பதை என்னல் ஊகிக்க முடிகிறது...... எதற்கும் நீ பாகீரதியை நாளைக்கு நம் வீட்டுக்கு அழைத் துக் கொண்டு வா; கலந்து பேசுவோம்' என்ருன்.

காதரீன் சகோதரனுடைய முகத்தைக் கவனித்த வாறே, "அண்ணு, கடைசியாக நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். கோபித்துக்கொள்ளக் கூடாது.'

ஜோஸப் நகைத்தவாறு, "என்ன, பீடிகை பெரிய தாயிருக்கிறதே? பயப்படாமல் விஷயத்தைச் சொல்லு."

வேறென்றுமில்லை. தரங்கிணியின் கலியான விஷயம் குறித்து, உனக்கு இவ்வளவு கணிகரம் ஏற்பட முகாந்திரம்......?” -

காதரீன் தயக்கத்தோடு கேட்டு நிறுத்தினள்.

ஜோஸப், "அதுவா? அதை இப்போது சொல்வதற் கில்லை. தரங்கிணிக்கு முதலில் கலியாணம் முடியட்டும். அப்புறம் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லு கிறேன்......"

காதரீன் கருவிழிகள் சகோதரன் முகத்திலேயே பதிந்து விட்டன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/124&oldid=1338540" இலிருந்து மீள்விக்கப்பட்டது