உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1132 திருக்குறட் குமரேச வெண்பா 243. உள்ளம் உருகி உயர்அருளே வள்ளலார் கொள்ள நின்ருர் என்னே குமரேசா-உள்ளும் அருள்சேர்ந்த நெஞ்சினர்க் கில்லே இருள்சேர்ந்த இன்னு வுலகம் புகல். (3) இ-ள். குமரேசா இராமலிங்கவள்ளல் உள்ளம் உருகி என்.என்.றும் அருள் சேர்ந்து கின்ருர்ரி எனின், இருள் சேர்ந்த இன்னு உலகம் புகல் அருள் சேர்ந்த கெஞ்சினர்க்கு இல்லை என்க. அருள் நிறைந்த இனிய மனம் உடையவர்க்கு இருள் கிறை க்க கொடிய துன்ப உலகத்தில் புகுதல் இல்லை. உயிர்க்கு உரியதுனே அருளே என்று முன்பு குறித்தார்; இதில் அதனையுடையவர் யாதும் அயரம் அடையார் என்கிரு.ர். இன்ன உலகம் என்ற த துன்பமே நிறைந்துள்ள நாகத்தை. தீவினை செய்த உயிர்கள் யாகன சரீரங்களை மருவி வேதனைகள் உழந்துபடும் வெய்ய துயரமான இடம் ஆதலால் இன்ன உலகம் என அதன் கொடிய இன்னல் கிலை கேரே தெரிய கின றது. அருள் உடையவர் யாருக்கும் இன்னல் செய்யார்; எவ்வழி யும் எவ்வுயிர்க்கும் இனிய இதமேசெய்வர்; ஆகவே அவர் இன்ப உலகமே புகுவர்; இன்னு காகம் புகார் ஆதலால் புகல் இல்லை என்று அவரது சுகமான உயர் நிலையம் தோன்ற உாைத்தார். தன் கெஞ்சில் அருள்சேர்க்க போதே அங்க மனிதன் அல்லல் யாவும் நீங்கி ஆனங்கங்லையை அடைகிருன்; இருள் சேர்க்க இன்னுகிலே அவனுக்கு யாதும் தெரியாமல் போகிறது. தன்னைச் சார்ந்தவனைச் சான்ருேன் ஆக்கி ஆன்ற பேரின்பகலனே அருளுதலால் அருளின் அதிசய மகிமையை அறிந்துகொள்ளு கிருேம். துயர இருள் ஒழியும் வழி தெளிவாய்த் தெரியவங்தது. துன்பத்தை அஞ்சுவதும் இன்பத்தை விரும்புவதும் மனித இயல்பு; இத்தகைய மனிதன் அருளைத் துணைக் கொண் டால் இருள் நீங்கி இன்பம் பெறுகிருன். அருள் ஒளி பாவிவனின் துயா இருள் அடியோடு ஒழிக் துபோம்; உயர் சுகம் ஓங்கிவரும். விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் கலங்களுர்த் தீவினை கடிமின் கடிந்தால்