பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 92 திருக்குறள் கல்வி யில்லாதவன் ஒரு சபையிலே போயொன்றைச் சொல்ல நினைக்கிறது. சுபாவமான முலையிரண்டு மில்லா தவளொருத்தி பெண்மையை வேண்டினாற் போலுமென்றவாறு. பெண்மையாவது பலருந்தன்னை விரும்பும் பெண் தன்மை -- 403. கல்லா தவரு நனிநல்லர் கற்றார்.முற் சொல்லா திருக்கப் பெறின் என்பது கல்வி யில்லாதவரும் நல்லவர்களாய்த் தோன்றுவர், கற்றவர் களிட சபையிலே யொன்றையுஞ் சொல்லாதிருந்தா லென்ற வாறு. கற்றவர்கள் முன்னே கல்லாதவன் சொன்னால் அறிவில்லாத தைத் தெரிந்து இகழ்வார்கள்; சொல்லாமலிருந்தால் இவனு மறிவுடைய னென்றிருப்பார் களென்பதாம். |H. 404. கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார் என்பது கல்வி யில்லாதவ னுடைய சினேகம்’ நன்றாயிருந்தாலு மறிவுடையா ரவனுடனே சினேகம் பண்ணார்களென்றவாறு. கல்வியில்லாதவனுக்கு நுண்மையான அறிவில்லையான படியினாலே அறிவுடையவர்கள் அறிவில்லாதவனுடனே சினே கம் பண்ணார் சி 405. கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் என்பது நூல்களைக் கல்லாதவன் யானறிவுடையேனென்று 1. கற்றவர்களுடைய 2. உறவு என்பது அச்சுநூல்