பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 19 & தன்னைப் பெரியவனாகச் சொல்லுதல்", கற்றவன் அவனைக் கண்டு வார்த்தை பேசினால் அவன் பெருமை கெட்டுப்போ மென்றவாறு , ஒருவார்த்தை சொல்லுமளவுமே நிற்பது: சொன்னவுடனே யறிவில்லாதவ னென்பது தெரியு மென்பதாம். டு 406, உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக களரனையர் கல்லா தவர் என்பது கல்லாதவர்கள் மனுஷராயிருக்கிறார்க ளென் கிற மாததிரமே: தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோ டொப்ப ரென்றவாறு. களர் நிலத்தை யொருவரும் பேனார்; களர் நிலம் ஒருவருக்கும் பலன்களைக் கொடாது; அது போலக் கல்லாத வரும் ஒருவராலேயுங் கொண்டாடப் படார்கள், பிறர்க்கு உபகாரங்களுஞ் செய்யா ரென்பதாம். ஆ'ா 4.07. நுண்மா னுழைபுல மில்லா னெழினல மண்மாண் புனைபாவை யற்று என்பது நுண் ணியதாய நூல்களைக் கற்று மாட்சிமைப்பட்ட அறிவில்லாதவனுடைய அழகும் ஆபரணங்களும் மரப் பா வைக்குப்பூட்டிய ஆபரணங்கள் போலேயா மென்றவாறு. அறவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் காண்கிறதும் அவற்றை மறவாமையுமாம். of 108. நல்லார்’கட் பட்ட வறுமையி னின்னாதே நல்லார்கட் பட்ட திரு •і «u і I <уы 1 . மதிக்கும்மதிப்பு என்பது அதிகமாக அச்சுநூல் உரை. 1. அவன் பொருமை - என்பது அச்சுநூலில் இல்லை. ப. கல்லார்' என்று காகிதப் பிரதியில் காணப்படுகிறது; 'கற்றார் வய முக்கலாம்; பிறர் பாடம் நோக்கி 'நல்லார்' என்றே திருத்தப்பட்டது.