பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.2 திருக்குறள் நாலும் சாகவேணு மென்கிறவர்களும் கெட்டுப் போகவேனு மென்கிறவர்களும் ஏறப்பட்ட கப்பலென்றவாறு. இந்த நாலு காரியங்களை யுடையவர்கள் கெட்டுப்போவார் கள் என்பதாம். - டு 6.06. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பய னெய்த லரிது என்பது ஒருவனுக்குப் பூமி முழுதும் ஆண்டவர்களுடைய செல்வந்தானே வந்தெய்திய விடத்தும். மடியுடையவன் அதனால் வரப்பட்ட பலனை யடைகிறது' அரிதென்றவாறு. மடியுடையவனுக்குப் பெரிய செல்வம் வந்தாலும் அந்தச் செல்வத்தை ரட்சிக்கத்தக்க முயற்சியில்லாத படியினாலே அந்தச் செல்வ மழியும்; அழியவே யவன் துன்பம் நீங்காதென்ற வாறு . சின் 607. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட ஞவுற்றில வர் என்பது மடியை விரும்பி நல்ல குணங்களை விரும்பாதார் தம்முடைய சுற்றத்தார் முன்னே ஆகாத விசேஷங்களைப் பேசி அவர்க ளாலே யிகழ்ந்து பேசத்தக்க வார்த்தையைக் கேட்பர்க ளென்றவாறு முன்னிகழ்ந்து பேசினபடியினாலே, பின் அவர்கள் பேசு கிறத்துக்கு மாத்திரம் சொல்லக் கூடாத படியினாலே கேட்பர் என்பதாம். GT 1. யடையிறது என்று காகிதச்சுவடியிலுள்ளது. 2. கேழ்ப்பர் என்று காகிதச் சுவடியிலுள்ளது. 3. முன்கழறுதலை மிகச் செய்து பின்-அச்சுநூல் (குறிப்புரை காண்க 4. பேசுகிறதற்கு 5. மாறுத்தரம்