பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* I 0. திருக்குறள் 715. நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு என்பது நல்ல தென்று சொல்லப்பட்ட குணங்கள் எல்லாத் கி லும்' நல்லது, தன்னிலும் பெரியவர்கள் சபையிலே தானொன்றினை முந்திச் சொல்லாமலிருக்கின்ற தென்றவாறு. பெரியோர்கள் முன்னே யொன்றைச் சொன்னால், குற்றம் வந்து இகழப் படுவரான படியினாலே, முந்தி யொன்றைச் சொல்லாமல் -* - அடங்கி யிருக்கிறதே நல்ல தென்பதாம். ரு 716. ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு என்பது மோட்ச மடைய வேண்டி நல்ல நிலைகளிலே நின்றா னொருவன் அந்த நிலை குலைந்து விழுந்ததோ டொக்கும், பெரிதான நூல்களைக்கற்று அவற்றின் பொருளை யறிந்த பெரியோர்கள் முன்னே ஒருவன் சொன்ன வசனங் குற்றப் படுகிற” தென்றவாறு. அச 717. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொற்றெரிதல் வல்லா ரகத்து என்பது குற்றமற்ற சொற்களையறிந்து சொல்லத்தக்க பெரியவர்கள் சபையிலே பல நூல்களையுங் கற்றறிந்தவர்களுடைய கல்வி விளக்கமாய் எல்லார்க்கும் அறியப்படு மென்றவாறு. HT 1. எல்லாவற்றிலும் 2. விழாத" என்பது காகிதச் சுவடி 3. குறைபடுகிறது அச்சுநூல் 4. கற்றறிந்தவர்களுடைய சொல்லின் அவர்களுடைய. அச்சுநூல்