உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 375 இப்பால் 90. பெரியாரைப் பிழையாமை என்பது. சாத்திரத்தினாலேயும் ஆசாரத்தினாலேயும் தவசினா, லேயும் பெரியோர்களானவர்களையும், அயிசுவரிய பெலங் களாலே பெரியவர்களானவர்களையும், இகழ்ந்து பேசாம லிருக்கவேணும்; இகழ்ந்து பேசினால் சீக்கிரத்திலே கெடுவ ரென்பத7ம். 891. ஆற்றுவா றாற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலை என்பது தாங்க ளெடுத்த காரியமெல்லாம் முடிக்க வல்லர்களை அவமானம் பேசாமலிருக்கிறதே, தனக்குத் தீங்கு வாராமல் காக்கிற காவலிலே யெல்லாம் அதிகமான காவலென்றவாறு நினைத்த கருமங்கள் முடிக்கவல்லவர்களை யிகழ்ந்தவனுக்கு அப்பொழுதே கேடுவரு மென்பதாம். தி 892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா விடும்பை தரும் என்பது சாத்திரம் நீதி தவசுகளாலே பெரியோர்களானவர்களை இகழ்ச்சி செய்தா லந்த இகழ்ச்சி பெரியவர்களாலே அவனுக்கு எந்நாளும் நீங்காத துக்கத்தைக் சொடுக்கும் என்றவாறு. நீங்காத துக்கமாவது, இம்ம்ையிலே தீராமல் மறுமையி லேயும் அனுபவிக்கிற நகர துக்கங்களாம். * 893. கெடல்வேண்டிற் கேளாது செய்க" அடல் வேண்டின் ஆற்று பவர்க ணி ழுக்கு என்பது 1. அவமதியாமல் - அச்சுநூல் 2. காற்கிற என்பது காகிதச்சுவடிே 1 . இகட்சி என்பது காகிதச்சுவடி. 4. துன்ப அச்சுநூல். 5. செய்து 8. விடல் - காகிதச்சுவடி