பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 38 1 தகப்பன், குருக்கள். நல்லவுறவின் முறையார் முதலாயி னார். நல்ல காரியங்கள் செய்தலாவது; இவர்கள் வேண்டியது கொடுத்தலாம். டு 9 0 6. இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள் அமையார்தோ ளஞ்சு பவர் என்பது தன்னுடைய பெண் சாதி தோளுக்குப் பயப் படுகிறவன்', விரத்துவ முண்டாகிய, தேவர்களைப் போல் இந்தலோகத்திலே வாழ்ந்தாலும். அவனுக்கு ஆண்மையில்லை யென்றவாறு. பகைவரை வென்றாலும் தன் பெண் சாதிக்குப் பயப்படு கிறவனுக்கு ஆண்மையில்லை என்பதாம். 907. பெண்னேவல் செய்தொழு கும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து என்பது நானமில்லாமற் றன் பெண் சாதி சொன்ன வேலையைச் செய்துகொண்டு திரிகிறவன்’ ஆண்மையினும். நாணமுடைத் தாயிருக்கிற பெண் மையே பெருமையுடையதாமென்றவாறு. ஆண்பிள்ளையைத் தன் சொற்படிக்கு நடக்கப் பண்ணுகிற படியினாலே பெண்மையே பெரியதென்பதாம். sa ! 9.08. நட்டார் குறை முடியார் தன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர். என்பது தாம் நினைத்தபடி யல்லாமல் தம் பெண் சாதி சொற்படிக்கு நடக்கிறவர்கள், தம்மொடு சினேகம் பண்ணினவரது குறையை முடிக்க மாட்டார்: அதல்லாமல் மறுமைக்கு உறுதியான தர்மங்களையுஞ் செய்து கொள்ள மாட்டார்களென்றவாறு, படுகுறவனை என்பது காகிதச்சுவடி 2 திரிகுறவன் என்று சுவடியி லுள்ளது