பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

445

பார்த்தல் தானே தாக்கிவருத்தும் அணங்கு தன்னுடனே எதுத்து[1] வருத்தம் பண்ணிச் சண்டை பண்ணுகிறத்துக்குச்[2] சேனையையுங் கூட்டிக் கொண்டு வந்தாப் போலே[3] யிருக்கிற தென்றவாறு.

1083. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்

பெண்டகையாற் பேரமர்க் கட்டு

என்பது (இதுவுமது)

கூற்றுவ னென்று சாத்திரத்தினாலே சொல்லுகிறத்தைப்[4] பண்டு கேட்டறிந்த தல்லாமல் கண்டறியேன்: இப்பொழுது கண்டறிந்தேன்; அதெப்படி யென்றால் *பெண்மையா யிருக்கிற ஶ்ரீயினுடைய பெரிய கண்களாயிருக்கு மென்றவாறு.*

பெண்மையாவது, நாணம் மடம் அச்சம் பயிர்ப் பென்னும் நான்கு குணங்களோடு கூடியது. பெண்மையால் இன்பம் பயத்தல் உண்டாயினும் துக்கம் பண்ணுகிறது வெகுவான படியினாலே கூற்றுவன் என்று கூறினான்

1084. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்

என்பது (இதுவுமது)

பெண்மை யென்கிற பெருமையை யுடைய இந்த ஸ்திரிக்குக் கண்கள் தம்மைக் கண்டவர்கள் பிராணனை யுண்ணத்தக்கதாக அமர்ந்தன[5] வென்றவாறு.

ஸ்திரீயினுடைய கண்கள் குணத்துக்கும் மென்மைக்கும் ஒவ்வாமற் பொல்லாதனவா யிருந்தன என்பதாம்.

1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்று முடைத்து

என்பது (இதுவுமது)


*முதல் *வரை: பெண்மையுடனே பெரிய அமர்த்த கண்களையுடையது அச்சு நூல்

  1. எதிர்த்து
  2. பண்ணுகிறதற்குச்
  3. வந்தாற்போலே
  4. சொல்லுகிறதைப்
  5. அமர்த்திருந்தன