பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

445

திருக்குறள்



என்னை வருத்துகிறபடியினாலே கூற்றுவனோ? என்னைப் பார்த்த[1] படியினாலே கண்ணோ? சுபாவமாகப் பயப்படுகிற படியினாலே மானோ? இன்ன தென்றறியேன்; பெண்சாதியிட[2] கண்களின் பார்வை இந்த மூன்று வகையை யுடையதாயிருக்கு மென்றவாறு.

இவள் கண்கள் இன்பமும் துன்பமும் ஒருக்காலே[3] செய்யா நின்ற தென்பதாம்.

1086. கொடும்புருவம் கோடா மறைப்பி னடுங்கஞர்

செய்யல மன்னிவள் கண்

என்பது (இதுவுமது)

பிரியாத சினேகத்தை யுடைய புருவங்கள் அந்தக் கண்களை மறைத்தால் அது இந்தப் புருவத்தைக் கடந்து வந்து எனக்கு நடுக்கத்தை யுடைய துக்கத்தைப் பண்ணமாட்டா என்றவாறு.

அந்தப்புருவம் மறையாவிட்டால் பார்வையினாலே துக்கம் வருமென்பதாம்.

1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்

படாஅ முலைமேற் றுகில்

என்பது

அந்த ஸ்திரீயினுடைய முலைகளினாலே வரப்பட்ட வருத்தத்தைச் சொல்லுகிறது

அந்த ஶ்ரீயினுடைய முலைகளின் மேலே பிடவை[4] போட்டிருக்கிறது. அந்த முலைகள் கண்ட பேரைக் கொல்லப் போகுதென்று[5] மூடியிருக்கிறது. மதம் பட்ட யானை கண்ட பேரைக் கொல்லப் போகுதென்று முகத்தை மறைத்து வைப்பார்கள், அது போலே என்றவாறு.

முலைகள் கொல்லுகிறதாவது, கண்ட இளைஞர் வருத்தமுறுகிறதாம்.


  1. பாராத-காகிதச்சுவடி
  2. யுடைய
  3. ஒருங்கே-அச்சுநூல்
  4. புடைவை
  5. போகிறதென்று