பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

453

மருந்தாவது அதுகளுக்கு[1] மாறானதாம்; அப்படியல்லாமல் இந்த ஶ்ரீயாலே வந்த வியாதிக்கு இவள்தானே மருந்தானாள் என்றவாறு.

அவளைக் கண்டு வருந்திய வியாதிக்கு அவளைச் சேர்ந்து அந்த வியாதியைத் தீர்ந்தானாமெனபது

1103. தாம் வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்

தாமரைக் கண்ணா னுலகு

என்பது நிரதிசய வின்பத்திற்குரிய நீ யிந்தச் சிற்றின்பத்திற்கு இச்சிக்கிறது தகாதென்ற பாங்கற்குச் சொல்லியது:

ஐம்புலன்களும் அனுபவிக்கிறத்துக்குத்[2] தான் விரும்பிய ஶ்ரீயினுடைய மெல்லிய தோளிலே துாங்குகிற[3] நித்திரையைப் போல வருத்தப்படாமல் பெறலாமோ, சிற்றின்பத்தைத் துறந்த யோகிகளால் எய்தப்பட்ட சொர்க்கலோக மென்றவாறு.

ஶ்ரீயினுடைய சுகம் எளிதாய் எய்தும்; சொர்க்கத்தை யடைகிறவர்கள், வெய்யிலும் குளிரும் பனியும் பசியும் நெடுங்காலம் பொறுத்து வருந்தியே அச் சுகத்தை யடைவர்கள் என்றவாறு.


1104. நீங்கிற் றெண்உங் குறுகுங்காற் றண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றா ளிவள்

என்பது பாங்கற் கூட்டத்திறுதிக்கட் சொல்லியது:

தன்னை விட்டு நீங்கினாற் சுடும்: சேர்ந்தாற் குளிரும்; இப்படிப்பட்ட நெருப்பை எனக்குக் கொடுக்கிறத்துக்கு[4] இவள் எந்த உலகத்திலே தேடிக் கொண்டாளென்றவாறு.

அவளைக் கூடாத பொழுது துக்கப்படுகிறதனாலே அனலென்றும், சேர்ந்து மகிழ்வுற்றத்தினாலே[5] குளிர்ச்சி யென்பதுமாம்.


  1. அவைகளுக்கு
  2. அனுபவிக்கிறதற்கு, அனுபவிப்பவர்க்கு-அச்சுநூல்
  3. தூங்கிற என்பது காகிதச்சுவடி.
  4. கொடுக்கிறதற்கு
  5. வுற்றதினாலே