பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை 491

1206. மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியான்

உற்றநாள் உள்ள உளேன்

என்பது, “அவரொடு புணர்ந்த நாளை யின்பத்தை நினைந்து மாய்ந்து போகா நின்றாய்; அந்த இன்பத்தை மறந்துவிடு” என்ற தோழிக்குச் சொல்லியது:

யான் அவரோடு புணர்ந்த நாளை யின்பதை நினைக்கிறதினாலே யிந்தத் துக்கமாகிற வெள்ளத்துக்குள்ளே பிழைத்திருக்கிறேன்: அந்த இன்பத்தை நினையாவிட்டால் பின்னை யெதனாலே பிராணனுடனே யிருப்பேன் என்றவாறு.

1207. மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே

னுள்ளினு முள்ளஞ் சுடும்

என்பது (இதுவுமது)

அந்த இன்பத்தை மறக்கவறியேனாகி நினையா நிற்கவும், பிரிவு என் உள்ளத்தைச் சுடா நின்றது; அப்படிப் பிரிவாற்றாத யான், அந்த இன்பத்தை மறந்தால், இறந்து போகிற தல்லாமல் எதனாலே யிருக்கப் போகிறே னென்றவாறு.

1208. எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ

காதலர் செய்யுஞ் சிறப்பு

என்பது, “இந்தத் துக்கமறிந்து வந்து காதலர் நினக்கு இன்பஞ் செய்வர்” என்ற தோழிக்குச் சொல்லியது:

காதலரை நாம் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கவர் கோபித்துக் கொள்ளார்: காதலரெனக்குச் செய்யு மின்பமாவது அம்மாத்திர மன்றோ என்றவாறு.

கோபித்துக் கொள்ளாமை யாவது நாம் நினைக்கிறதற்கு உடன்பட்டு நம் நெஞ்சிலே யிருக்கிறது