பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

493

யான் விருந்தாக எதைச் செய்வேன் என்றவாறு.

விருந்து என்பது புதிதாய் வந்தவர்களுக்குச் செய்யு முபசாரம் அது கனவுக்கு ஒன்று காணாத படியினாலே யாது செய்வே னென்றாள்.

1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்

குயலுண்மை சாற்றுவேன் மன்

என்பது, தூது விட நினைத்தவள் சொல்லியது:

தூங்காம லிருக்கிற கயல்போலும் என் கண்கள் யான் இரந்தாற் றுஞ்சுமாயின், கனவினிடையே காதலரைக காணலாம்; கண்டால் அவருக்கு யான் வருந்தியிருக்கிற தெல்லாம் யானே விரியச் சொல்வேன் என்றவாறு.

தூதுவரோடு சொல்லி யனுப்பினால் சுருங்கச் சொல்ல வேண்டும் தான் சொன்னால் மனதில் உண்டான தெல்லாம் சொல்லலாம் என்பதாம்.

1213. நனவினா[1] னல்கா தவரைக் கனவினாற்

காண்டலி னுண்டென் னுயிர்

என்பது ஆற்றாளெனக் கவன்ற[2] தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது:

நனவிலே வந்து என்னைச் சேராதாரைக் கனவிலே காண்கிறதினாலே என் உயிர் நிற்கிறது; இல்லாவிட்டால் இறந்து போம் என்றவாறு.

1214. கனவினா னுண்டாகுங் காமம் நனவினா

னல்காரை நாடித் தரற்கு

என்பது இதுவுமது.

நனவிலே வந்து சேராதவரை அவர் போன விடந் தேடிக் கொண்டுவந்து கனவு தருதலால், அந்தக் கனவினிடத்திலே


  1. நனவு-விழிப்புநிலை
  2. கவன்ற-வருந்திய