பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

501

மில்லை என்றவாறு.

1238. முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
               பைந்தொடிப் பேதை நுதல்

என்பது[1] தலைமகன் தன்னுள்ளே சொல்லியது:

தன்னைக் கெட்டியாய்க் கட்டிக் கொண்ட என் கைகளை நெகிழ்த்தவுடனே, நாயகியுடைய முகம் பசலை பூத்தது; அப்படிப்பட்ட முகம் இந்தப் பிரிவிற்கு யாது செய்யுமோ என்றவாறு.

ஆகவே கடிதிற் செல்ல வேண்டுமென்பது கருத்து.

1239. முயங்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
            பேதை பெருமழைக் கண்

என்பது இதுவுமது

அப்படிக் கைகளை நெகிழ்த்த போது, நடுவே சிறுகாற்று நுழைந்தது; அந்தக் காற்றுப் பொறாமல் நாயகியுடைய கண்கள் பசலை பூத்தன; அப்படிப்பட்ட கண்கள், மலைகளும் காடும் நாடுகளும் இவைகளெல்லாம் நடுவேயிருக்க எப்படிப் பொறுத்தன என்றவாறு.

1240. கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
            ஒண்ணுதல் செய்தது கண்டு

என்பது இதுவுமது.

குளிர்ந்த காற்றுப் பட வந்த கண்ணின் பசப்புத் தனக்கயலாயிருக்கிற நுதல் பசலை பூத்தது கண்டு துன்பமுற்றது என்றவாறு.

முன்பு தான் புணர்ந்திருந்த நாளையில் புல்லின கை நெகிழவே

உறுப்பு நலனழியும்; அப்படியிருக்கவே இப்பொழுது நாம் பிரிந்து நெடுநாளாகையால் பசப்பு முதலானது வந்து நாயகியை


  1. வினை முடிந்து மீடலுற்ற தலைமகன் முன்னிகழ்ந்தது தன்னுள்ளே சொல்லியது