பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



502

திருக்குறள்

வருத்தா நிற்கும்; ஆதலின் யாம் கடிதிற் போய் நாயகியைச் சேரவேண்டும் என்பதாம்.

ஆக அதிகாரம் ளஉ௪ க்குக்குறள் சநஉள௪௰

இப்பால் 125. நெஞ்சொடு கிளத்தல்

என்பது, பிரிவு பொறாமல் வருந்திய வழி, தன் குறை சொல்லுதற்கு ஒருவரையும் காணாமல் செய்ய வேண்டிய வகையறியாது, தலைவி நெஞ்சொடு சொல்லியதாம்.

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சேயெனைத்தொன்று

மெவ்வநோய் தீர்க்கு மருந்து

என்பது, தன் ஆற்றாமை தீருந் திறன் நாடியது:*

நெஞ்சே! இந்தக் காம நோயினைத் தீர்க்கும் மருந்தொன்றை நீயே யறிந்து எனக்குச் சொல்லாயோ என்றவாறு.

1242. காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு

என்பது, தலைமகனைக் காண்பதில் விருப்பமிகுதியாற் சொல்லியது:

என் நெஞ்சே! நீ வாழ்வாயாக; நாயகன் நம்பேரிலே காதலில்லாத போது, நீ அவர் வரவு பார்த்து வருந்துவது, நின் பேதைமை யல்லாமல் பிறிதில்லை என்றவாறு.

யாம் அவர்பாற் செல்லுதலே அறிவாவது என்பதாம்.

1243. இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பிரிந்துள்ளல்

பைதனோய் செய்தார்க ணில்

என்பது இதுவுமது

நெஞ்சே! அவரண்டைக்குப் போகாமலும்; பிராணனை விடாமலும் இருந்து, காதலர் வரவை நினைந்து, நீ வருந்துகின்றது


  • இங்குப் பரிமேலழகர், “தலைமகன் தூதுவரக்காணாது சொல்லியது”

என்பர்*