பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

519

கொள்ளார் என்பது பற்றி, அவர்பக்கல் போகாநின்றாய் அதுவும் அறிவில்லாமையாம் என்றவாறு.

1293. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ

பெட்டாங் கவர்பின் செலல்

என்பது இதுவுமது][1]

நெஞ்சே, என்னிடத்திலே நில்லாமல், நீ நினைத்தபடியே அவரிடத்திலே போதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு உறவின் முறையார் உலகத்திலே இல்லை என்னும் நினைவோ? அல்லாமல் உன் சுபாவமோ சொல்லுக என்றவாறு.

கெட்டதாவது - மனமழிவது[2]

1294. இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மறறு

என்பது இதுவுமது

நெஞ்சே! நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் அனுபவிக்க நினைக்கிறதல்லாமல் அவர் செய்த குற்றத்தை நினைத்து, அது தரும் வகை பிணங்கி நின்று பின்பு இன்பம் நுகரக் கருதாய்: அப்படிப்பட்ட உன்னோடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன் என்றவாறு.

1295. பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சும்

அறாஅ விடும்பைத்தென் னெஞ்சு

என்பது, வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது:

என் நெஞ்சு காதலரைச் சேராத நாள் அதற்கு வருத்தப்படும்; சேர்ந்தால், அவர் பிரிந்து போகப் போகிறார் என்றெண்ணி, அப்பிரிவிற்கு வருத்தப்படும்; ஆதலால் எந்நாளும் துக்கத்தையே யுடையது என்றவாறு.



  1. *முதல் *வரை அச்சுநூல்
  2. மானமழிவது என்றிருத்தல் வேண்டும்.