பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

537

39. அறத்தான் (பக்கம் 217)

அறத்தான்-இல்லற துறவற தர்மங்களினால், வருவது படப் பட்டது. இன்பம்-செளக்கியம் (அதாவது. இல்லறத்தினால் வருவது புண்ணிய தர்மோதயமாகிய தேவாதி சுகஸ்வரூபத்தை யளிக்கும் சம்ஸார சுகமாகும். துறவறத்தால் நிச்சயஸ்வரத் மோர்த்தமாகிய மோஷ சுகமாகும்): மற்றெல்லாம்-இந்த இரண்டு அறங்களிலும் சேராதவைகளெல்லாம் (அஞ்ஞானத்தி னாலேற்படுவன வெல்லாம்) புறத்த-அதர்மமாகிய பாபச்செயல்களாம். (அவற்றால்) புகழுமில- (ஆத்மாவுக்குப்) புகழ்ச்சியுமில்லை.

47. இயல்பினான் (பக்கம்) உ சு)

கிருகஸ்தாஸ்ர மத்துக்குரிய தர்மார்த்த காம இயல்போடு கூடி வாழ்பவன் என்பான். (இல்வாழ்க்கைக்கு இயல்பு அறம் பொருள் இன்பத்துடன் வாழ்வது)

50. வையத்துள் (பக்கம் 44)

இல்வாழ்க்கையில் அதற்குரிய கொல்லாமை முதலான விரதங்களில் வழுவாமல் வாழ்பவன் மறுமையில் சுவர்க்கத்தில் தேவனாகப் பிறப்பான்.

61. பெறுமவற்றுள் (பக்கம்) ௩௯

பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள், அறிவு-இயற்கையறிவைக் கொண்டு அறிந்த-(கல்வியின் ஞானத்தை) அறிந்து கொண்ட, மக்கட் பேறல்ல.-மக்கட் பேறுகளல்லாமல், பிறமற்ற மக்கட் பேறுகளை யாம் அறிவதில்லை-(புத்தியுள்ளவர்களாய்) நாம் உணர்வதில்லை.

ஒருவன் பெறும் மக்கட் பேறுகளுள் இயற்கை அறிவைக் கொண்டு கல்வியை அறிந்து கொண்ட மக்களை மதிப்பது போன்று பிறமக்களை யாம் மதிப்பதில்லை - என்பது இதன் கருத்து.