பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



538

திருக்குறள்

123. செறிவறிந்து (பக்கம்145)

செறிவு-நெருக்கமான (நுகத்தளவு தூரத்தை), அறிந்து-முன் பார்த்து, ஆற்றின்-நல்வழியில், அறிவு-ஞானத்தினால், அறிந்து–ஜீவன்களுக்குத் துன்பம் வராத விரதத்தைத்) தெரிந்து, அடங்கப்பெறின்-(அஸ்த பாதாதிகளை மெதுவாக இயங்கச் செய்து அமைதியாய் நடந்து) அடங்கப் பெற்றால், (அது) சீர்மை - சிறப்பை, பயக்கும் - (அவனுக்குத்) தரும். (காயத்தின் அடக்கம் என்பது ஜீவன்களுக்குத் துன்பம் வராமல் காப்பாற்றி ஒழுகுவது)

245. அல்லலருளாள் (பக்கம் 43) அருள் ஆள்வார்க்கு - அருளையுடையவருக்கு அல்லல்-துன்பம் இல்லை-எப்போது மில்லை; அதற்கு வளி - கனோகதி, கனவாத, தனுவாத மென்னும் மூன்று மகா காற்றுக்களால் சூழப்பெற்று. மல்லல்-நிலை பெற்றிருக்கும். மா-பெரிய, ஞாலம்–உலகம், கரி-சாக்ஷி. இதன் கருத்து: வலி பொருந்திய மூன்று மகா காற்றுக்களின் ஆதாரங்களால் நிலை பெற்றிருக்கும் உலகத்திற்கு அபாயமில்லாதது போல, அருளை ஆளுகின்றவருக்கு யாதொரு துன்பமுமில்லை என்பதாம்.

255. உண்ணாமை (ருசு)

ஊன்-மாமிசத்தை-உண்ணாமை - புசியாமையினால், உயிர்–ஆத்மா, நிலை- (பாரம்பரியத்தால்) சாஸ்வதமாகவுள்ள மோக்ஷத்தில் உள்ளது. (எப்பொழுதும் நிலை பெற்றது) இருப்பதாம். உண்ண-மாமிசத்தைப் புசிக்க அளறு-(அவனை விழுங்கிய நிகேதம் என்றும்) நரகம், அண்ணாத்தல் செய்யாது-பின் உமிழ்தற்கு வாய் திறவாது.

269. கூற்றங்குதித்தலும் (பக் ௩௩) நோற்றலின்-தவத்தின் வலிமையால், ஆற்றல் தலைப்பட்டவர்க்கு– (கேவல) ஞானத்தின் பெருமையை அடைந்தவர்க்கு, கூற்றங் குதித்தலும் கைகூடும்-யமனைக் கடத்தலும் சித்தியாகும். யமனைக் கடத்தலாவது , பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு