உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு என்பது, ஆகாசத்திலே மேக்ங்கள் வந்து பெய்யப்பட்ட மழை யினது நன்மையைச் சொல்லுகிறோ மென்றவாறு. 11. வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிர்த மென்றுணரற் பாற்று என்பது மழை காலங்களிலே பெய்து வருகிறபடியினாலே பூலோகம் நன்றாயிருக்கும்; ஆனபடியினாலே அந்த மழை இந்த வுலகத் துக்கு அமிர்தமென்று சொல்லப்படு மென்றவாறு 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய துவும் மழை என்பது உண்ணப்பட்டவர்களுக்கு உண்ணத்தக்க வஸ்துவை நல்ல வுணவு உண்டாக்கி அத்தை யுண்கிறவர்களுக்கு முனவாக நிற்கும் மழை யென்றவாறு. &2– 13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி என்பது மழை வேண்டிய காலத்தில் பெய்யாமல் போனால் சமுத்திரஞ் சூழ்ந்திருக்கப்பட்ட" பூமியிலே யிருக்கிற மனுஷரைப் பசி வாதிச்சுக் கொல்லு மென்றவாறு На 14. ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் என்பது _* மழை பெய்யாத காலத்திலே உழுகிற பேர்கள் ஏராலே உழுகிறது முதலான காரியங்களைச் செய்யமாட்டார்களென்ற வாறு. تيrاث

  • அமிர்தம்-அமிழ்தம் என்பது பிறர் பாடம்

1. 'தூஉ' என்பதே சரியானபாடம் 2. உண்பவர்க்கு என்க. 8. வுண வாக 4. அதை 5. சூழ்ந்திருக்கும் 6. வாதித்து.