பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 81 82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்பது சாகாம லிருக்கிற மருந்தாகிய அமிர்தத்தை யுண்ணப் போகச் சில விருந்து வந்தால் அவர்களைப் புறம்பாக விட்டுத் தானே யுண்ண வேண்டாம், அவர்களையும் கூடவே வைத்துக் கொண்டு சாப்பிட வேணு மென்றவாறு. 92– 83. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று என்பது நாள்தோறும் வருகிற விருந்தினர்க்கு உபகாரங்களைச் செய்கிறவனுக்கு அயிசுவரியம் போய்த் தரித்திரம் வருகிற தில்லை; விருந்தினர்க்கு உபகாரஞ் செய்யவே அயிசுவரியம் நாள்தோறும் வளருமென்றவாறு WFL 84. அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து நல்விருந் தோம்புவா னில் என்பது சந்தோஷத்துடனே விருந்தினர்க்கு உபகாரஞ் செய்கிறவன் விட்டிலே மகாலட்சுமியுஞ் சந்தோஷத்துடனே யவன் மனையை விட்டுப் போகாமலிருப்பாள். சந்தோஷமா யிருக்கிறத்துக்குக் காரனந்தான் செல்வம் நல்ல வழியே செலவழிக்கிறதினா லென்பதாம்; செல்வ மதிகமாகிறத்துக்குக் காரணம் ஞானமா சார மதிகமாகிற தென்பதாம்" - அ 85. வித்து மிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம் விருந்தினர்க்கு முந்திச் சாப்பாடிட்டுத் தான் பிறகு சாப்பிடு கிறவன் பயிரிடுகிற புலத்துக்கு விதைவிதைக்க வேண்டாம்: 1. பிற்சேர்க்கை குறிப்புரை காண்க 2. ஷ க! 1. முளிந்திரர்க்கு என்பது அச்சுநூல் 2. பிற்சேர்க்கை குறிப்புரைகாண்க என்பது