பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு

வானவர் தானவர் போனது போலவே (போ)

சரணங்கள் மேடையில் நின்றொரு பஞ்சவர் ணக்கிளி

மின்னர்கை தப்பிஎன் முன்னாக வந்தது பேடைஎன்றேஅதைச் சேவல் தொடர்ந்தது

பின்னொரு சேவலும்கூடத் தொடர்ந்தது சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல்

சுந்தோப சுந்தர்போல் வந்த கலகத்தில் காடெல்லாம் பட்சியாகக் கூடி வளம்பாடிக்

கண்ணியும் தட்டியென் கண்ணிலும் குட்டியே (போ) ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்துநான்

அப்பாலே போயொரு மிப்பாயிருக்கையில் மாயிரும் காகங்கள் ஆயிரம் பட்டு

மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே காயம் ஒடுங்கிக் கிடந்தது கண்டுநான்

கண்ணி கழற்றி நிலத்திலே வைத்தபின் சேயிழை தன்பொருட் ட்ாலேபஞ் சாக்கரம்

செபித்த மன்னவன் பாவம்போ னாற்போலப் (போ) தம்பமென்றேநம்பி னோரைச் சதிபண்ணித்

தாம்வாழப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும் பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர்

பாவம் கழுநீராய்ப் போவது போலவும் கும்ப முனிக்குச் சிவமான காலம்

குதித்தோடிப் போன வயிணவர் போலவும் அம்பிகை பாகர்திரிகூட நாதர்

அடியவர் மேல்வந்த துன்பங்கள் போலவும் (போ) (சுந்தோப சுந்தர்கள் - உடன்பிறந்தவர் தேவமங்கையான திலோத்தமையின் அழகிலே மோகமுற்று வெறிகொண்டு இருவரும் தம்முள் சண்டையிட்டு, அவளை அடையாமலேயே மாய்ந்தனர் என்று புராணம் கூறும். அதுபோலச் சேவல்கள்