பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 155

இரண்டும் சண்டையிட்டனவாம். ஒருமிப்பாய் - ஒரே நினைவாய், தம்பம் - பற்றுக்கோடு; ஸ்தம்பம் என்ற வட சொல்லின் திரிபு. பம்பும் - நெருங்கும்.)

25. நூவன் பழித்தல்

(சிங்கன் அப்படி வேட்டையைக் கோட்டைவிட்டதைக் கண்ட நூவனுக்கு ஆத்திரம் வருகிறது. அவன் சிங்கனை இகழ்ந்து பேசுகின்றான்.)

வருக்கைப் பலாவினடியிலே வீற்றிருப்பவரான குற்றாலநாதரின் திரிகூடச்சாரலிலே, தன் மாமியார் மகள் மேல் ஒரு கண்ணும், பருத்தியின்மேல் ஒரு கண்ணுமாகப் பருத்தி எடுப்பவனுடைய தன்மையைப் போல், நீயும் வேட்டையிலே கருத்தில்லாமல் அதனை இழந்து போனாய். நின் எண்ணமும் வேறாகிவிட்டாய். தாய்க்கு அறிவு கற்பித்த மகளைப்போல என்னை வேறு சிரித்து இகழ்ந்தாய். ஆனால் உன்னைக் கண்டு பலரும் சிரிக்கும்படி காமப்பேய் செய்து விட்டதடா, சிங்கா செய்துவிட்டது!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வருக்கையார் திரிகூடத்தில்

'மாமியார் மகள்மேற் கண்ணும் பருத்திமேற் கையும், ஆன

பான்மைபோல் வேட்டை போனாய் கருத்துவே றானாய் தாயைக்

கற்பித்த மகள்போல், என்னைச் சிரித்தனை சிங்கா உன்னைச் சிரித்தது காமப் பேயே.

26. தேடுவாயே!

கொன்றை மாலையணிந்தவரின் திரிகூடத்திலே காம மிகுதியினால் கெடுதல் தருகின்ற கள்ளைக் குடித்தவரைப் போலே அறிவு மயங்கி வீழ்ந்துவிட்டாய். நீ கொக்குப் பிடித்து வாழ்ந்தாய்! அடிக்கொரு நினைவு எதற்காகச் சிங்கா? ஆசைப்பேய் உன்னை எளிதிலே விடாது. செடிக்கு ஒரு