பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே

வானிரவி முழைகள் தொறும் நுழையுமலை அம்மே துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும்

துங்கர்திரி கூடமலை எங்கள் மலை அம்மே. 16 கொல்லிமலை என்பது எனக்கு இளையவளாகப் பிறந்த என் தங்கையான செல்லி என்பவள் இருக்கும் மலையாகும். என் கொழுநனுக்குக் காணியாட்சியான மலை பழநிமலை யாகும். கதிரவன் படிந்துசெல்லும் விந்தியமலை என் தந்தைக்குரிய மலையாகும். இமயமலை என்னுடைய தமையனுக்குரிய மலையாகும். சொல்வதற்கு அருமை யுடையதான சுவாமி மலை என்னுடைய மாமியின் மலையாகும். என் தோழியின் மலை நாஞ்சில் நாட்டிலுள்ள வேள்விமலையாகும். மேகக் கூட்டங்கள் முழவுகளைப் போல இடிமுழக்கினைச் செய்ய, அதற்கிணங்க மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்கும் திரிகூட மலையே எங்கள் மலையாகும். t - கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே

கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே

இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே சொல்லரிய சாமிம்லை மாமிமலை அம்மே

தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்

திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே 20 (சொல்லரிய - சொல்லால் போற்றுதற்கும் அருமை யுடைய செல்லினங்கள் - மேகக் கூட்டங்கள். எல் - சூரியன்)

எங்கள் குலத்தைத் தவிர வேறொரு குலத்திலே பெண் கொடுக்கவும் மாட்டோம், பெண் கொள்ளவும் மாட்டோம். எங்கள் சாதியினரை ஒருவர் உறவு பிடித்துக் கொண்டனரென்றால், எந்நாளும் அந்த உறவை நாங்கள் கைவிடவும் மாட்டோம். அப்படிப்பட்ட குறவர் குலத்தவர் நாங்கள். நாங்கள் அச்சங்கொண்டு நடுங்கும்படியாகத்