பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 87

தினைப்புனத்திலே வந்த பெரிய மிருகமாகிய யானையை விலக்கி, வேங்கைமரமாகி நின்று எமக்கு நிழல் செய்த அந்த நன்மையினை எண்ணியே அருளாளரான இலஞ்சி வேலவர்க்கு, எம்குலத்துப் பெண்களுள் ஒருத்தியை மனைவி யாக நாங்கள் கொடுத்தோம். அதற்காக, எங்கள் ஆதினத் திலிருந்த பிற மலைகளையெல்லாம் அவளுக்குச் சீதனமாகவும் கொடுத்தோம். ஞாயிறும் திங்களும் சுற்றி வருகின்ற மகாமேரு மலையினைத் துருவன் என்பவனுக்குக் கொடையாகக் கொடுத்து உதவினோம். அத்தகைய பெருமையுடைய எங்களுடைய மலையானது, பரமனாகிய குற்றாலநாதர்க்கு உரிய திரிகூட மலையாகிய பழைய மலையேயாகும்.

ஒருகுலத்தில் பெண்கள் கொடோம் ஒருகுலத்திற் கொள்ளோம்

உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள் வெருவிவருந் திணைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி

வேங்கையாய் வெயில்மறைத்த பாங்குதனைக் குறித்தே அருளிலஞ்சி வேலர்தமக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தோம் ஆதினத்து மலைகளெல்லாம் சீதமாக் கொடுத்தோம் பருதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்

பரமர்திரி கூடமலை பழையமலை அம்மே. 24 (ஒரு பெண் - ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிநாயகி. ஆதினத்து மலை - ஆட்சியிலிருக்கும் மலைகள்.)

9. வசந்தவல்லி சொன்னது சங்கக் குழைகளின் வளம் செறியுமாறு விளங்கும் காதுகளை உடையவர் திருக்குற்றாலநாதர். அவருடைய மலையிலே வாழ்ந்து வருகின்ற இளமயிலினைப் போன்றவளே! “யானைத் தந்தங்களினுடைய அழகினை உன் கொங்கைகள் காட்டும். பூங்கொடியின் நுண்மை வளத்தினை உன்னுடைய நுண்மையான இடையானது காட்டும். குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள காட்டின் வளத்தினை உன் கரிய கூந்தலானது காட்டிக் கொண்டிருக்கும். இப்படி நின் தோற்றமே மலை வளத்தின் சிறப்பினைக் காட்டிக்