பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


மேற்குறித்த மூவகை அறங்களுள்ளும் பொருட் செல்வம் உடையோர், ஏழைத் தொழிலாளர், முதலிய பலதிற மக்களும் தம் வாழ்வில் எளிதிற் கடைப்பிடித்தற்குரிய தலைசிறந்த அறமாகத் திகழ்வது, பசியால் வாட்டமுற்றவர்களின் பசிப்பிணியைத் தீர்த்தலாகிய 'அன்னதானம்' ஒன்றேயாகும்.

பசித்தோர்க்கு உணவளித்தலின் இன்றியமையாமையினை அருட்பிரகாச வள்ளலார் தாம் இயற்றிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலில் பின் வருமாறு விரிவாக விளக்கியுள்ளார்கள்:

'பசியினால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வருமின்பம் பர இன்பமாகும். அவை இம்மையில் யோகசித்திகளாலும், ஞான சித்திகளாலும் வருகின்ற இன்பங்களும் முடிவில் அனுபவிக்கப்படும் மோட்ச இன்பமும் ஆகுமென்றறிய வேண்டும். உண்பதற்கு ஆகார மில்லாமல் சோர்வடைந்த சீவர்களுக்குச் சீவகாருண்யத்தால் ஆகாரம் கொடுக்க உண்டு பசி நீங்கிய தருணத்தில், அந்தச் சீவர்களுக்கு அகத்தினிடத்தும், முகத்தினிடததும் தழைத்துப் பொங்கித் ததும்புகின்ற இன்பமும், அதுகண்ட போது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறுண்டாகிற இன்பமும், ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்தில் பூரணமாகத் தோன்றுகின்றவை யாதலால் பர இன்பம் என்றறிய வேண்டும்.

வஸ்திரம், இடம், நிலம், பொன், பொருள் முதலானவைகள் இல்லாமல் துன்பப் படுகின்றவர்கள், அத்துன்பங்களை மன எழுச்சியால் சகித்துக் கொண்டு உயிர் தரித்துத் தங்களால் செய்யக் கூடிய முயற்சியைச் செய்யக் கூடும். பசியினால் துன்பம் நேரிட்ட போது, மன எழுச்சியால் அத்துன்பத்தை சகித்துக் கொள்ளக் கூடாது