பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சத்தான்; என்ருலும், நாட்டின் நிலைமையோ பஞ்சைதான் என்ருல், பதறுவோன் ;-நெஞ்சில் கொடுமை எனக்கண்டால் கூர்ந்ததனே நோக்கும் நெடுமையும், நீள் அறிவும் வாய்த்தோன் ;-படுமதிபோல் தேய்ந்தாலும் தண்மை ஒளியைத் திருநாட்டிற்(கு) ஈந்துதவும் நெஞ்சத் தியல்பினன் !-காய்ந்த சருகுநிறை ஆற்றங் கரைத்தோப்பில் நெஞ்சம் உருகி, நிலைமாறி, உடலும்-கருகி உருண்டோடும் ஆற்றில் உயிரை இழக்க வருவாளேக் கண்டான் கறுப்பன் ;-அருகில் மறைந்தான் ; மரம்போல் மரமாகி நின்ருன் ! நிறைந்த மதிபோல் முகத்தாள்-குறைந்த மதிபோல் ஒளியிழந்து வாய்பொத்தி ஆற்றில் குதித்துயிரை மாய்க்கத் துணிந்தாள் !-எதிரில்முன் பாய்ந்தோடி வந்து கறுப்பன் பசுங்கொடியை மாய்ந்திடா வண்ணம் தடுத்திட்டான் !-தேய்ந்த நிலவொளியில் அந்த நீள்கரும்பு கண்ணிர் கலகலெனச் சிந்திக் கதறி,-உலகில் இனிவாழ இந்த் எளியவளால் ஆகா: எனைவிடுக!’ என்றிறைஞ்சிக் கெஞ்சப்-பனித்தரையில் அன்ேைளக் கீழிருத்தி, அன்புமொழி பேசிப் பன்னுள் பழக்கமிலே என்ருலும்,-என்னல் தடுத்தாண்ட இவ்வுயிர்க்கே என்னுயிரை என்றும் கொடுத்தாண்டு கொள்வேன்; கலங்கேல்1-அடுத்த துயரெனக்குச் சொல்லென்று சொன்னன் கறுப்பன் கயல்விழியாள், 'தாயில்லை; தந்தை-அயலூரில் 8.