பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணையிலே கூலிப் பணிபுரிந்த தொண்டுகிழம் , உண்ண, உடுக்க வழியில்லை ;-பண்ணே முதலாளி வீட்டில் முழுநேர வேலைக்(கு) உதவியாய் நான்ஏற்றுக் கொண்டேன்!-முதலாளி நல்லசிவ பக்தர்; நாட்டாண்மைக் காரர்;மேற் செல்வரக் குடையோர்:நற் றீந்தமிழில்-வல்லார் ; வறியோர் பலர்க்குதவும் வள்ளல்; அறநூல் நெறியுரைப்போர்; நேர்மைக் குணவான்;-சிறியோர்க்குப் பள்ளி அமைத்தோர்; நற் பண்பாளர் என்றந்த உள்ளுரில் வாழ்வோர் உரைப்பார்கள்!-தள்ளாத என்தந்தை ஒர்நாள் இருமி உயிர்துறந்தார்! முன்வந்தார் பண்ணே முதலாளி!-'உன்தந்தை செத்தார்; உலகில் உயிர்வாழ்வோர் யாவருமே இத்தரையிற் சாவா திருப்பதில்லை ;-சித்தம் கலங்கா திருஉன்னே நான்காப்பேன்’ என்ருர்! இலங்குலகில் யாருமற்ற ஏழை-கலங்காற்றில் தத்தளிக்கு மாப்போலத் தத்தளித்தேன்! பண்ணையார் நித்தம் அழைப்பார்; நிலேகேட்ப்ார்;-புத்தம் புதிய கருத்தோதிப் புன்முறுவல் காட்டி, 'விதியின் விளையாட்டே! என்பார்!-அதிவிரைவில் தந்தை பிரிவை மறந்தேன்; இருந்தாலும், இந்த உலகினிலே யாரெனக்கு?-சிந்தித்தேன்! நாட்கள் பலசெல்ல, நாடோறும் பண்ணேயார் வேட்கை விழியின் விளையாட்டை-வாட்கண் உணராமல் இல்லை! உணர்ந்தென்ன செய்வேன்? பணமோடிப் பாதாளம் பாயும் !-குணவான், 9.