பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றன் மகள்போல், இருவிழிபோல் நானுன்னே இன்றுமுதற் காப்பேன்; எழு!’ என்ருன்-அன்றே கறுப்பன் அழைத்துவர, இல்லக் கிழத்தி - பொறுப்பாய் வினவிப் புழுங்கி,-வெறுப்பின்றி, வந்தவளை 'வாவென்ருள்; வாழ்த்திமனம் கூசாது சொந்த மகள்போல் அரவணைத்தாள் ;-இந்த உலகத்தில் ஏழையே உள்ளத்தில் தூய்மை பலவும் கிறைந்தோர்; பகையைத்-தலைதெறிக்க ஒட்டும் இயல்புடையோர் ; ஊரில் இவரின்றேல் ஈட்டும் பொருளில்லை , வாழ்வில்லை ;-நாட்டில் பொருளைத் தமதாக்கிப் பொய்யுரைத்தே ஏய்க்கும் திருடராம் செல்வரும் இல்லை :-குருடான இவ்வுலகம் ஒர்நாள் எழுச்சிபெறப் போவதுண்மை அவ்வுலகம் காண்போம்! அழாதிருநீ!-நவ்வி இளங்கன்றே ! என்னுே டிருவென்ருள் வந்தாள் உளங்களித் தொப்பிள்ை! சின்னுள்-குளங்கள், வயல்வெளிகள், வாய்க்கால், மலர்க்காடும் தோப்பும் பெயலாற் பெரிதும் தழைத்துப்-பயன்பலவும் தந்துவர, வந்தாள் மகவொன்று தந்தாளே ! சொந்த மகவால் துயர்மறந்தாள் 1-முந்தை மனக்கசப்பு மூடு பணிபோல் மறைய இனிக்கும் மொழிபேசி ஈன்ற-தனக்குரிய பிள்ளையைப் பேணி வருநாளில், கைப்பிள்ளை வெள்ளைச் சிரிப்பால் வெறியேற்ற-உள்ளத்தில் இன்பம் பெருக இருந்துவந்தாள் அவ்வூரின் துன்பம் விலக்கும் குறியோடு-நன்மை 1 I