பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையம்' எனும்பெயரில் மேலேறும் பலரும் நிலையாகக் கண்டார் விடுதி !-'மலர்க்கரையின் ஒரத்தில், மாந்தோப்பில் ஊருக் குழைத்துவரும் சீரார் விடுதியெனச் செப்புவர்,-ஊரிற் படித்த பெரும்புலவர் ; பண்பட்ட நெஞ்சர் : தடித்த உருவினர்; மேலோர்;-எடுத்து விளக்கும் அறிவினர்; மேதையாம் காந்தி வளர்த்த அறநெறியை என்றும்-உளத்திற் சிறிதும் நழுவாத செம்மலாம் என்றே உறுதியாய் மக்கள் உரைப்பர் 1-நெறியில் தவருதார் என்றந்த நன்மை நிலையம் அவரைத் தலைவராய் ஆக்கச்-சுவரில் முளைத்த மரம்போல் முழுஉரிமை யோடு வளர்த்தார் நிலையத்தை; மக்கள்-உளத்திற் குடிகொண்டார்;ஓங்கு புகழ்கொண்டார் அன்னேர் அடிபற்றி மக்கள் நடக்க-நெடுநாள் நன்மை நிலையந் தனிற்சென்று நாடோறும் புன்மை களையப் புகுந்தனர் -மின்னல் இடையாள், கறுப்பன் இட்டுவந்த பெண்ணுள் தடையின்றி நன்மை நிலையம்-இடையிடையே சென்ருள்; நிலையத்திற் செப்பும் அறவழியில் நின்ருள்; நெறியுரைக்கக்கேட்டுவந்தாள்!-அன்ருேர்நாள் நன்மை நிலையத்து நற்றலைவர் அங்குவந்த அன்பர்க் கறிவை விளக்கிப்பின்-'என்மகளே ! பின்செல்வாய் ! உன்னிடத்திற் பேசப் பலசெய்தி இன்றுண்டு! நில்லென் றெழுந்துசென்ருர்!-மின்னிடை ஒன்றும் புரியா தொதுங்கியிருந்தாளே! (யாள் 13 . .