பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருடி இப்பொறிக் கொண்டைச் சேவல் எழுந்து வாய்ப்பறை கொட்டி வருகதிர் வாழ்த்தும் ; திங்கள் மங்கும்; சிறுசுடர் வீசும்; எங்கோ ஒருநாய் சங்கொலி-எழுப்பும்; தெருநாய் குரைக்கும் ; செழுங்கடல் ஆர்க்கும் ; வெள்ளி கிழக்கில் துள்ளி உயரும் ; அழும்பிள் ளேக்கோ அன்னேதா லாட்டச் செழும்புன லோடை சிறுமுழ வார்க்கும் ; ஆயர் மத்தால் தோய்தயிர் கடைய விழித்த கிழங்கள் வெற்றிலே இடிக்கும்; முல்லை நுணுவும் கொல்லே நொச்சியும் 'சில்லென் காற்ருெடு நன்மணம் தேக்கும் ; புள்ளின் இசையொடு சில்வண் டார்க்கும் கவின்மிகு விடியற் காலே கண்டான் ! படித்த உழவன் படர்ந்த தோளான் ; நடுத்தர உயரம்; நகைதவழ் முகத்தான்; ஏழைக் குதவும் இயல்பினன்; காளே ; ‘இனியன் அவன்பெயர்; இனியன் எவர்க்கும்; கனிமொழி யாளன்; கண்ணுக் கினியன் ! தன்னுடன் பயின்ற தோழன் பொன்னுெளி கrலே வருவதாய்’க் கடிதம் கிடைக்கப் பு' 'வண்டி நிலையம் போக எழுந்தான் ! 14