பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னஞ் சாலேயும், சிறுசெடிப் பூவும், முன்னர்ப் பரந்த செந்நெல் வயலும், மூடு பனியும், வாடைக் காற்றும், மூடிய மதகிடை ஒடிய நீரும், நீண்ட புனேயும், நெடுமரக் காடும் கண்டும், கண்கள் காணு கிைத் தோழன் நினைவில் தோய்ந்து நடந்தான்! இருவரும் பள்ளியில் இணைந்து பயின்றவர் பட்டினம் விட்டும், படிப்பை முடித்தும் எட்டாண் டாயின; எனினும், இனியன் கண்முன் கழிந்த கல்லூரி நாட்கள் - நிகழ்ச்சிஒவ்வொன்றும் நினைவில் இருந்தது! விரிவுரையாளர் தமிழ்க்கவி விளக்கிச் சிரித்ததும், பொன்னன் திகைத்ததும் இன்றும் விரித்த படம்போல் விழிமுன் தோன்றும் ! நேரம் இருப்பினும், தூரம் குறையினும் 'புகைவண்டி நிலையம் போகும் கால்கள் விரைந்தே செல்லல் மெய்யெனக் கண்டான் ! நீள்மரத் திடையில், நெடுவழிக் கோடியில் புகைவண்டி நிலையம் பொலிவுட னிருந்தது! பசுமை தோய்ந்த பழமரக் காட்டில் விசும்பிடை எழுந்தது விடியற் பரிதி! வந்தவர் அனைவரும் வண்டி வருதிசை சிந்தையைச் செலுத்தினர்; திரண்ட கும்பலில் கைப்பொருள், படுக்கை, மெய்ப்பொருள், அணிகள் அவ்வப் போதும் அவரவர் காத்தனர்; 15