பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தித் தாளேச், சிறுபொருட் கூடையை எய்தினர்; பாய்ந்தே இரைந்தனர் கும்பலில் ! தொங்கிய மணியும், துரத் திருப்போர் இங்கே வருக! எனவொலித் தழைத்தது! தொடுவான் மருங்கில் தோன்றிய புள்ளி நெடுவான் மருங்கே நிமிர்ந்து வளர்ந்தே புகையைக் கக்கும் எரிமலை போர்க்களப் பகையை விரட்டிப் பாய்வதைப் போல வரவர வளர்ந்து வானிடைப் புகுந்து பெரும்புகை கக்கிப் பேரொலி எழுப்பி வண்டி வந்தது! வந்தது கும்பல் ! இனியன் விழியோ இழிவோர் யாரையும் கனிவுடன் பார்த்தே களைத்துச் சோர்ந்தது ! தோளைப் பிடித்தே துடுக்காய்க் குலுக்கும் ஆளேப் பார்த்ததும், அந்த விழிகள் வானுெளி பெற்றன; வாழ்த்தின வந்தோன் தோளொடு இனியன் தோள்பின் னியதே ! ஆய்தப் புள்ளிபோல் அமைந்த அடுப்பிற் காய்பால் காத்தே இனியன் தாயார் வாயில் நின்று வழிபார்த் திருந்தார்; செந்தமிழ் வரவு செப்பி மகிழ்ந்தார்; சிற்றுணுப் படைத்தார்; தேநீர் கொடுத்தார்; சுற்றம் நட்புச் சூழ்நில கேட்டார்; பொன்னுெளி அருகிற் பொறுப்புடன் வந்தே, ‘என்ன சொன்னலும் என்மகன் ஏனே கன்னி கழியும் கவலையில் இல்லை ! என்னுல் எப்படி இனியும் ஆகும்? 16