பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னேன் ; சிரித்தே என்மேற் சாய்ந்தாள் ; வளர்ந்தோம் ; எம்மிடை வளர்ந்தது காதல்! கல்லூரி சென்று கற்கத் தொடங்குமுன் பருவ மடையும் பக்குவ மான பெரிய மொக்காய்ப்பேரெழில் ஊற்ருய் இருந்தாள் ; சொல்லிப் பிரிந்தேன்; அன்று நீர்வழி கண்ணே நிமிர்த்திப் பார்த்தாள்; உள்ளத் துயரை ஒள்விழி காட்ட, - *அஞ்சேல்!” என்று நான் அவளை அணைத்தேன்; 'காட்டு மலர்க்கு நீட்டிய கழுத்து நாட்டெம் மலர்க்கும் நீட்டா தத்தான் ! மறந்தால் வாழேன்; வாழேன்!” என்ருள் ! "படித்து வந்தேன்; பல்கலை கற்றேன்; அடுத்த திருமண ஆசையால் ஊர்வர அத்தையும், அருமை அத்தை மகளும் கைத்தொழில் நம்பிக் காலங் கடத்தி வறுமைப் பிடியால் வாழ வருந்திப் பஞ்சம் தவிர்க்கப் பட்டினம்சென் ருராம் ! அங்கோர் வீட்டில் வேலைக் கமர்ந்து வயிற்றைக் கழுவி வருகின்ற நாளில் வீட்டுப் பிள்ளே வெளியூ ரிருந்து படிப்பை முடித்துப் பட்டமும் பெற்று வந்து சேர்ந்தான் சொந்த வீட்டிற்கே ! 'அழகு. பெண்ணே அழிக்கும் பெருந்தீ! அதிலும் ஏழையின் அழகுப் பெருக்கோ உடலுடன் பிறந்த ஒப்பிலாத் தொழுநோய் செல்வச் செருக்கில் திரியும் காளேயர் 19