பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்வழிப் பட்ட கன்னியர் மீளல் அரிதே தோழ 1 அரிதே யாகும் ! 'வீட்டுக் காளே வெறித்துப் பார்த்து, மெல்லச் சிரித்து, மிடுக்காய் நடந்தே இனிமையாய்ப் பேசியும், கனிவாய்ப் பார்த்தும், நெருங்கும் போது நெடுமூச் செறிந்தும், இரண்டு பொருள்பட ஏதோ உளறியும் பார்க்கும் பாங்கின் பண்பை உணர்ந்தே ஒதுங்கி வந்தாள் ; ஒருநாள் இரவு பதுங்கி அவளின் படுக்கை அறையில் துழைததான் காளே ; அறைந்தாள் அவளும் ; திருடி திருடி 'எனத் திரித்துக் கதையை அருகி லிருக்குஞ் சாவடி அடைத்தான் ! ஏழையின் சொல்லை எவரே கேட்பர் ? நங்கை சிறைப்பட நற்ருய் செத்தாள் ! 'சூதாற் பழியைச் சுமத்தும் எவரும் திதே வாழ்தல் 1 தீமையில் தீமை ! படித்தவன் பண்பிப் பண்பா தோழா ? பார்த்தாற் கொன்று பழியைத் தீர்க்கக் காத்துளேன் என்றும் ! காலம் வரட்டும்!" என்றே கன்னியின் எழிற்படம் தூக்கிப் பொன்னுெளி கையிற் பொருத்தினுன் இனியன் பொருத்தலும், கதைகேட் டிருந்த பொன்னுெளி கைகள் தடுங்க, உடலும் நடுங்க எழுந்தே - கண்ணிர் சிந்தக் காலில் விழுந்து, 20