பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. யார் பொறுப்பு? உள்ளமது பொங்கிடநான் எழுதலுற்றேன் ஒளிமுகத்தாள் கவிப்பெண்ணென் காத லிக்கு துள்ளிவந்தாள் என்மனேவி; அருகில் நின்ருள்; மிகுகோபச் சுடர்விழியால் கொன்று விட்டாள்; வெள்ளைத்தாள் எடுத்தெழுதிக் காலம் போக்கி விளையாடில், மரக்கறிகள் கடைக்குச் சென்று கொள்வதியார்? நாழிகையோ ஒடிப் போச்சு! கூடையிதோ விரைந்துசென்று வருவீர்!’ என்ருள். பெண்சொன்ன படிக்கணவன் கேட்கா விட்டால் பெற்றபிள்ளைகத்தியழ அடிப்பாள்-இல்லாள்! மண்விழும் வயிற்றுணவில் துன்பம் துன்பம் ! மனப்பெருக்கால் நான்வளர்த்த கவிதைச் சிட்டின் எண்ணம்வந் திளவிரவில் தேடிப் பார்த்தேன்; எங்குமதைக் காணேன்நான் ; தூக்க மற்றேன் ; 'தண்மதியின் அழகொளியில் என்ற னுள்ளச் சஞ்சலமே மாயம்’ என வெளியைப் பார்த்தேன். 35