பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருண்டமர அண்டைவீட்டுத் தோட்டத் துள்வாழ் இடுக்கெல்லாம் பால்நிலவு பாயக் கண்டேன்; சுருண்டங்கோர் தாள்கிடக்கும் தோற்றங் கண்டேன் சொல்லிற்று எனதுள்ளம் அதுதான் என்று ! வெருண்டஎன் மனையாளின் செய்கை போலும் ! விரைந்துமதில் தாண்டியதைக் குனிந்தெடுத்தேன் இருகரத்தால் எனைத்தழுவி வளையொ லிக்க இதழ்கூடவே முத்த மழை பொழியக் கண்டேன் பேய்"என்று உடல்நடுங்க, அனேக ரத்தைப் பிய்த்தெறிந்து, 'தூ'துரது போபோ!' என்றேன்; வாய்திறந்தேன; கூச்சலிட்டேன் உதவி நாட! வண்ணமலர் செங்கையாலென் வாயைப் பொத்திப் பேயல்ல! அண்டைவீட்டுப் பெண் நான் ! என்ருள்; பின்புறமாய் மறுமுறையும் எனைய 8ணத்து, ‘மாயமெலாம் இனுமெதற்கு? நேற்று மாலை வரைந்தெனக்கு வீசிவிட்ட திதோபார்!’ என்ருள் விளங்கிவிட்ட தொருநொடியில் எனக்கு யாவும்: விலையில்லா என்காதற் கவிப்பெண் ணிற்கே உளமகிழ்வால் எழுதியஎன் காதற் சீட்டை உணராமல் என்மனைவி வீசி விட்டாள்; இளமங்கை நான் என்று சீட்டைக் கண்டாள்; இரவெல்லாம் விழித்திருந்தாள் என்னைச் சேர; களங்கமிலா என்னிதழில் முத்தம் தந்தாள் : களிப்படைந்தோம் ! குறறத்திற் கியார்பொறுப்பே 36