பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தி பந்தியாய் வந்து குவிந்தனர் ! தொந்தி பெருத்த மந்திக் குரங்கின் கூண்டிற் கருகிற் கூண்டொன் றிருந்தது ! நீண்ட வெளியிற் கம்பிகள் நிறுத்தி வேண்டும் போது விளையாட் டயர ஆண்டுச் சமைத்த அழகிய கூண்டுள் ஒருபுறம் புலியொன் றுலவித் திரியும்; ஒருபுறம் மனிதக் குரங்கொன் றிருக்கும் ! குரங்கைப் பற்றிக் கூருர் இல்லை! வருவோர்க் கெல்லாம் வணக்கஞ் செய்யும் ; வாழைப் பழமும், வட்ட முறுக்கும் கூழைவால் குரங்கு, கொடு'வெனக் கேட்கும்; ஒடும்; ஆடும்; உயர்மர மேறிக் கூடினர் களிக்கக் குப்புற வீழும் ! ஒருநாள் குரங்கின் ஒப்பிலா ஆடலே வருவோர் கண்டே வாழ்த்துரை நல்கினர்; பழம்பல தந்தனர்; பண்ணியம் தந்தனர்; அழகிய குரங்கின் ஆடலே வியந்தனர்! மீண்டும் ஏறித் தாண்டிக் குதிக்கையிற் கூண்டில் வாழும் கொல்புலி அருகில் வீரிட் டலறி விழுந்ததே குரங்கு! கூர்நகப் புலியோ கொல்லப் பாய்ந்தது! குப்புறக் கிடக்கும் குரங்கின் காதில், * அப்பா சாமி அஞ்சேல் 1’ என்று - புலித்தோல் போர்த்த பொன்னன் உரைத்தான்! ஒலித்தது சிரிப்பொலி ஒலித்தது நீடே ! 41