உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமை குலத்தது 105

பற்றித் தாங்கள் செய்யும் சதிச்செயலே அவள் அறி வாளோ என ஐ புற்ருன். முருகனிடத்தில் அதுபற்றிச் சொல்லலாமா என கினைத்தான். என்ருலும் அவர்கள் இரு வரும் இருக்கும் அன்பு வாழ்வில் தன் சொல் முருகனுக்கு ஏற்காது என்பதையும் உணர்ந்தான். மார்த்தாண்டனிடம் சொல்லலாம் என்ருலோ, அவன் தன் பேரிலேயே திரும்பி ளுல் என் செய்வது என்று சிந்தித்தான். முடிவில் இன்னும் சில நாளேக்குப் பொறுத்துப் பார்க்கலாமென்றும், காரியம் மிஞ்சுமாயின் தானே தனியனுக்குமுன்பே அவளைத் தீர்த்துக் கட்டிவிடலாம் எனவும் முடிவு செய்தான். ஆம், தாங்கள் செய்யும் திருட்டு தெரியா வகைக்கு எத்தனே கொலை வேண்டு மானலும் . செய்ய உடன் பட்டது வீரப்பன் உள்ளம். அவனுக்கு அவை யெல்லாம் குற்றம்ாக தெரியவில்லே. அது அவன் தவறு இல்லை; இளமை முதல் திருட்டுத் தொழிலில் வாழ்ந்து வந்தான். அவனும் எவ்வளவோ கொள்ளேயும் கொலையும் செய்திருப்பான். எனவே தனி யனேயோ, அழகியையோ கொல்லுவதில் அவனுக்கு ஏன் தயக்கம் உண்டாகப்போகிறது? -

எப்படியும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தனியனைக் கொண்டுவந்து விடுவது என்று முடிவு செய்தார்கள் வீரப் ப்னும் மார்த்தாண்டனும், ...? தங்க ளது அழகிய மாட்டு வண்டியில் கமலாம்பாளும் பிறரும் சென்னைக் கடற்கரைக்கோ, வேறு இடங்களுக்கோ பொழுது போக்குக்காகச் சென்று உலவி வருவது அவர்களுக்குத் தெரியும். அடுத்த ஞாயிறும் அவ்வாறு செல்வார்கள். செல் லும்போது, கன்கு குணமடைந்த தனியனேயும் அழைத்துச் செல்வார்களென்றும், அப்போது வண்டியை எப்படியாவது மடக்கி அவனேக்கொண்டு வந்துவிடவேண்டுமென்றும் முடிவு செய்தார்கள். அவன் அவர்களுடன் செல்லாதிருந்தால், ஒருவேளை தனியாக வீட்டிலிருப்பானென்றும், துப்பாக்கி யோடு சென்று அங்குள்ள வேலையாட்களே மிரட்டி எப்படி யும் கொண்டுவந்து விடலாம் என்றும் முடிவு செய்தனர். கொண்டுவந்து அவனைக் கொல்வதா வேண்டாமா, என்ற விவாதம் எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/106&oldid=580159" இலிருந்து மீள்விக்கப்பட்டது