உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX

கொடுமை குலத்தது

சிறு வர்களைத் திருடப் பழக்கிவந்த அந்தச் சிறு திருட்டுப் பள்ளிக்கூடம் இவ்வளவு பயங்கரக் கொலைக்கள இயக்கமாக மாறுமென்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? என்ருலும் அந்தக் கொலேயே அவர் தம் வாழ்வுக்கும் முடிவாக அமைக் தது என்று எண்ணும்போது ஒருவகையில் ஆறுதல் ஏற்படு கிறது, உலகில் மக்கள் குற்றம் செய்வது இயற்கையே. அக் குற்றம் செய்த பின் தனிமையில் உட்கார்ந்து சிந்தித்தால் அக் குற்றத்தின் கொடுமை, செய்தவனுக்கே தோன்ருமல் போகாது. சிலர் அறியாமலே குற்றம் செய்வதும் உண்டு. அவர்கள் தம் குற்றம் அறியின் அதற்காக வருக்திக் கழுவாய் உண்டா எனக் கதறி வாடுவர். தமிழ் நாட்டில் அந்த கிலே யில் வாழ்ந்த மன்னர்கள் எத்தனையோ பேர்? கோவலன் உயிரை ஆராயாது கொன்ற குற்றத்திற்காக, மற்றவர் குறை கூறுமுன் தானே தன் உயிரைக்கொடுத்து, வளைந்த கோலைச் செங்கோலாக்கினன். பாண்டியன் நெடுஞ்செழியன். குற்றம் அறிஞர் உள்ளத்தை ஆட்டிப் படைக்கும் ஒரு பேய். அறிக் தோ அறியாமலோ ஒரு குற்றம் செய்ய நேரிடின் ஆயுள் வரை அது பற்றி அறிஞர் சிங்தை அறிவுறுத்திக்கொண்டே யிருக்கும். ஆனல் அறிவற்ற மற்றவர்கள் குற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே செல்வார்கள். அத்துடன் தாம் செய்தது சரியெனவும் வாதிடுவர். தாம் செய்த குற்றம் வெளிப்படுமாயின் அதை மறைக்கக் கொலே முதலிய எந்தக் கொடுமையும் செய்யத்துணிவர். அதுதான் அவர் தம் கிலே.

வீரப்பன் அழகியின் போக்கிலே ஏதோ வேறுபாடு கண் டான் என்று கண்டோம். அந்தத்திங்கட்கிழமை இரவு அவள் தனியே எங்கோ வெளியே சென்று வந்ததைக் கண்ட பிறகு அவளுல் பொறுத்திருக்க முடியவில்லை. மேன்மேலும் அவள் செயலே ஆராயத் தொடங்கினன். ஒருவேளை தனியனேப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/105&oldid=580158" இலிருந்து மீள்விக்கப்பட்டது