உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடி வெள்ளி 103.

வேண்டுமென்றும் கூறினள். அதில் ஆழ்ந்திருந்த செல்வ நாதரும் கமலாம்பாள் சொல்வது சரிதான் என்ற முடிவுக்கு, வந்தார். ஒருசேரக் கள்வர் கூட்டத்தைக் கருவறுத்த பின் அமைதியாக அண்ணுமலேசென்று ஆராயவேண்டுவனவற்றை: ஆராயலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதற்காக உடனே போலீசுக்குச் சென்று செய்யவேண்டிய ஏற்பாடுகளைச் செய்யப் புறப்பட்டார். என்ருலும் வியாழக்கிழமை இரவு அழகியைக் கண்ட பிறகே முழு நடவடிக்கையும் எடுக்க வேண்டியுள்ளதால் எச்சரிக்கை மட்டும் செய்துவைக்க விரும் பினர். அவர் கமலாம்பாளிடம் விடைபெற்றுக்கொண்டு, தக்கன செய்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டார். கமலாம். பாளோ கன்ருக எல்லாம் முடியவேண்டுமே என்று இறை வனே வேண்டிக் கொண்டாள். தனியனே தன்னேப் பற்றி இரண்டுபேர் கவலைப்படுகிருர்களே என்பதையும் அறியாமல் பழைய துன்பங்களே யெல்லாம் மறந்து, மணிமேகலையுடன் மரத்தடியில் உட்கார்ந்து பொழுதுபோக்கிக் கொண்டிருங் தான். அழகியோ தான் காட்டிக்கொடுத்ததற்குக் கழுவாயாக எப்படியும் அவன் உயிரைக் கள்வர் கையில் சிக்காது காப் பாற்ற வேண்டுமென்று இரகசியமாக எல்லாவற்றையும் ஆராயத் தொடங்கினள். வீரப்பன் அவள் இரகசியங்களை அறிவதை ஒற்று இருந்து கண்டுகொண்டே வந்தான். இப்படி ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டும் பார்த்துக்கொண்டும், மறைந்தும் வெளிப்பட்டும் வர நாட்கள் ஒன்று, இரண்டு,

மூன்று என்று.கடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/104&oldid=580157" இலிருந்து மீள்விக்கப்பட்டது