உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. துன்பச் சுழல்

ஓர் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு, இருவரும் கீழே இறங்கினர்கள். தூரத்தே மறைந்திருந்த அழகி, கமலாம் பாளே அடையாளம் கண்டுகொண்டு ஓடிவந்தாள். திருடர் கள் மேன்மேலும் தனியனுக்கு இழைக்கும் தீமைகளைப் பற்றியும், மிக விரைவிலே அவர்களைப் பிடிக்க வழிசெய்ய வேண்டும் என்பது பற்றியும், மார்த்தாண்டனது தங்க சாலை விலாசம், ஒற்றியூர் விலாசம் முதலியன பற்றிய தகவல்களையும் விளக்கிச் சொன்னுள் அழகி. கள்வர்கள் அகப்பட்டால் தானுந்தானே உடன் அகப்பட்டு அவதி யுற நேரும் என்று அவள் நினைக்கவில்லை. செல்வநாதரும் எப்படியும் கள்வர்களைப் பிடித்துவிடுவதாகவும், அவர் களோடு அழகியும் சேர்ந்திருந்தாலும் எப்படியும் அழகியை மீட்டு விடுவதாயும் கூறினர். மறுபடியும் அடுத்தபடி காண்பது பற்றிப் பேசினர்கள். அடுத்த திங்கட்கிழமை வரையில் ஒத்திப்போட வேண்டாமென்றும். அதற்குள் ளேயே எவ்வளவோ காரியங்கள் நடைபெறவேண்டி உள்ளன. வென்றும் அழகி கூறினள். செல்வநாதரும் உணர்ந்தார். அடுத்த வியாழக்கிழமை இரவு அதே நேரத்தில் அங்குக் காணலாம் என்ற முடிவுடன் பிரிந்தனர். செல்வ நாதர் அழகியின் துணேயைப் போற்றிப் புகழ்ந்தார். அவர் களிடம் விடைபெற்றுச்சென்று ஒற்றியூர் சேர்ந்த நேரத் லேதான் முன் சொன்னபடி வீரப்பன் இவளது நடத்தை யில் ஐயங்கொண்டு நேருக்கு நேராகத் தானே அவள் செயலைக் காண்பதாக முடிவு செய்தான்.

இரவு திரும்பிய செல்வநாதரும், கமலாம்பாளும் பிரம்பூர் மாளிகையிற் படுத்துக் கொண்டார்கள். பொழுது விடிந்ததும் செல்வநாதர் சிற்றுண்டிகொண்ட பின் மாம்பலம் புறப்படத் தயராக இருந்தார். அவர் கமலாம்பாளிடம் தான் உடனே திருவண்ணுமலை புறப்பட்டுச் சென்று, தனி யனேப்பற்றிய தகவல் ஏதாவது கிடைக்குமா என்று அறிந்து வரப் போவதாகச் சொன்னர். கமலாம்பாளோ அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்றும், கள்ளர்களால் வர இருக்கும் கொடுமையை முதலாவதாகக் களைந்துவிடவேண்டு மென்றும், அதற்கு வேண்டிய நடவடிக்கைகளைச் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/103&oldid=580156" இலிருந்து மீள்விக்கப்பட்டது