பக்கம்:துன்பச் சுழல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடி வெள்ளி 101

ஒன்றும் செய்யாது உடனே அவ்விடத்தை விட்டுப் புறப் பட்டான். என்ருலும் அவள் செய்கைகளை யெல்லாம் ஆராயத் தலைப்பட்டான். حت

குறிப்பிட்ட திங்கட்கிழமையன்று செல்வநாதர் பிரம்பூர் மாளிகைக்கு வந்து சேர்ந்தார். கமலாம்பாளிடம் அவர் நெடுநேரம் தனித்த அறையில் பேசிக்கொண்டிருந்தார். தனியனைப் பற்றிய தகவ்ல்களை யெய்லாம் கூறிள்ை கமலாம் பாள். அனேத்தையும் கேட்ட செல்வநாதருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. திருவண்ணுமலே என்றதும் ஏதோ கிடைக் கும் என எண்ணினர். திருவண்ணுமலே சென்று அங்குள்ள கிறித்தலுப்பிரசவவிடுதியில் விசாரித்தால் ஏதாவது உண்மை தெரிய இருக்கும் என நினைத்தார். அவர் மனம் அவரை உடனே புறப்பட்டுச் செல்லத் தூண்டிற்று. என்ரு லும் அன்று திங்கட்கிழமை யாதலாலும், அன்று இரவு அழகியைக் கண்டு கள்வர் நிலைபற்றி அறியவேண்டி யிருந்த தாலும் பிறகு செல்லலாம் என முடிவுசெய்தார். என்ருலும் திருவண்ணுமலைக்குச் சென்று தனியனேப் பற்றிய முழு வரலாறும் அறிந்துகொள்ளும் வரையில் அமைதிக்கு வழி யில்லை என்று கண்டார்.

இரவு உணவுக்குப் பின் வண்ணுரப்பேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று அழகியைக் கண்டுவிட்டு வருவதாகச் சொன்னர் என்ருலும் அழகி தன்னை அறியமாட்டா ளாதலாலும், கமலாம்பாளும் உடன் வர விழைந்ததாலும் இருவரும் காரில் பதினேரு மணிக்குமேல் புறப்பட்டனர். நல்ல நிலவாக இருந்தமையால் நகர விளக்குகளெல்லாம் கூட கிறுத்தப்பட்டன. மக்கள் நடமாட்டமே இல்லை. எங்கோ இரண்டொருவிடங்களில் தெருவில் சிலர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கார் விரைந்து சென்றது. இரகசியங்களைப் பற்றி அறியச் செல்வதால், டிரைவரை வீட்டிலே கிறுத்திவிட்டுச் செல்வநாதரே காரைச் செலுத் திக் கொண்டு சென்ருர், கமலாம்பாள் பின் புறத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வண்ணுரப்பேட்டை கேட்டிடம் கார் கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/102&oldid=580155" இலிருந்து மீள்விக்கப்பட்டது