பக்கம்:துன்பச் சுழல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 துன்பச் சுழல்

என்றும், அவ்வாறு கொண்டுவந்து தங்கள் காரியத்தை முடித்துக் கொள்ளலாமென்றும் திட்டமிட்டனர். இந்தத் திட்டம் முருகனுக்குக் கூடத் தெரியாது. மார்த்தாண்டனும், வீரப்பனும் தனியாகக் கலந்து செய்யும் சதி இது. அழகி மட்டும் எப்படியோ ஒற்றுக் கேட்டு இவற்றையெல்லாம் அறிந்து வந்தாள். அதைப்பற்றி யெல்லாம் முருகனிடம் சொல்லலாமா என்று எண்ணினள். என்ருலும், சொன்னல் அவன் இதை யெல்லாம் ஒற்றுக் கேட்டால் தவறு என்று ஏதாவது சொன்னல் என்ன செய்வது என மயங்கிள்ை. முடிவில் ஒன்றையும் வெளியிடலாகாது என்றே திட்ட மிட்டாள். பாவம்-முருகன் அவ்வளவு கொடியவன் அல்லன். இதை அறிந்தால் ஒரு வேளை தடுத்திருப்பான்.

சில நாட்களாக வீரப்பனுக்கு அழகியின்மேல் ஐயம் உண்டாயிற்று. தானும் மார்த்தாண்டனும் வரும்போ தெல்லாம் அவள் எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பதும், அவள் நடந்துகொள்ளுகின்ற முறையும், பிறவும் அவனே ஐயங்கொள்ளுமாறு செய்தன. என்ருலும் ஒன்றையும் திட்டமாக அறிந்து கொள்ளுமுன் எதையும் சொல்லலாகாது என்று வாளா இருந்துவிட்டான். ஆனால் அவள் செயலை யெல்லாம் மட்டும் ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினன். திங்கட்கிழமை வந்தது. அன்று ஏதோ முருகன் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தான். வீரப்பன் தற்செய லாக இரவு பத்து மணிக்கு ஒற்றியூர்ப்பக்கம் போனன். அங்குச் சிறு பிள்ளைகள் தவிர முருகனே, அழகியோ யாரும் காணவில்லை. முருகனே மார்த்தாண்டன் அனுப்பின்ை என அறிந்தான். அழகி சென்றவிடம் தெரியவில்லை. அவன் ஐயம் உறுதியாயிற்று. எங்கோ இரவில் சென்று ஏதேதோ சூழ்ச்சி செய்கிருள் என அறிந்தான். நெடுநேரம் காத்திருந்தான். நடுநிசியில் பன்னிரண்டு மணிக்குமேல் எங்கிருந்தோ வந்து சேர்ந்தாள் அழகி. உடனே அவள் அறைக்குச் சென்று விட்டாள். அந்த நேரத்தில் அவள் அறைக் கதவைத் தட்டிக் கேட்கலாம் என்ருலும் தைரியமில்லே வீரப்பனுக்கு. தனித் திருக்கும் ஒரு பெண்ணின் அறையை நடு இரவில் தட்டினல் வீண் விபரீதம் வரும் என நினைத்தான். எனவே அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/101&oldid=580154" இலிருந்து மீள்விக்கப்பட்டது