பக்கம்:துன்பச் சுழல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடி வெள்ளி 99

அவ்வளவுதான் நான் தாயைப் பற்றி அறிந்தவை. தந்தையோ யார் என அறியேன். அம்மா இருந்தாலாவது அவர்கள்டம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். அதுவுமில்லை. எனது தந்தையார் இருக்கிருரா இல்லேயா என்பதும் தெரியாது. அனதை பெற்ற ஒரு அைைதயானேன் நான். ஏதோ கிறித்துவ சமயத்தைப் பரப்ப வந்த அந்த விடுதித் தலைவர்கள் அன்பால் வளர்த்து மாணவர் விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள். அதுவரையில் அவர்களே வளர்த்து வந்தார் கள். இந்தத் தகவல்களையெல்லாம் விடுதித் தலைவர் ஒரு நாள் என்னிடம் சொன்னர் என்று கூறினன். மேலும் அவன் மாணவர் விடுதியில் பட்ட அல்லலேயும், பிறகு காஞ்சியில் பொன்னப்பர் மனேயில் உழன்றதை பும், பின் சென்னை வழியில் கண்ட காட்சியினையும், சேர்ந்தாரை வேண்டாமென ஒதுக்காது, வருக என்று வரவேற்று, எப்படியும் வாழவைக் கும் சென்னே நகரைச் சேர்ந்து திருடர் கைப்பட்டதையும் பிறகு செல்வநாதரைக் கண்டதையும், மறுபடியும் கள்வர் கைப்பட்டு அவர் தம் மனேக்கு வந்து வாழ்வு பெற்றதையும் விளக்க உரைத்தான்.

ஒருவாறு அவன் வரலாற்றைக் கேட்டறிந்த கமலாம் பாள், சிந்தித்து, அவற்றை எல்லாம் செல்வநாதரிடம் சொல்லி ஏதேனும் வழி உண்டா என ஆராய வேண்டும் என்று முடிவு செய்தாள். எப்படியும் மறுநாள் திங்கட் கிழமை வண்ணுரப்பேட்டைப் பக்கம் போகச் செல்வநாதர் வரத்தானே போகிருர், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டார். -

ஒற்றியூரில் திருடர்கள் ஒரே முடிவாக இன்னும் சில நாட்களில் தனியனேக் கொலைசெய்து விடவேண்டுமென்றே தீர்மானித்து விட்டார்கள். அதை இரசியமாக அறிந்து அழகி எப்படியும் திங்கட்கிழமை இரவு எல்லாவற்றையும் சொல்லி அவனே மீட்க வழி செய்ய வேண்டும் என்று உறுதி கொண் டாள். தனியன் நோய் நீங்கப்பெற்று மெதுவாக வெளியில் வந்து உலவுவதையும், மாளிகை மதிற்கவரைத் தாண்டி, வெளியில் வரும்போது எப்படியும் கொண்டுவரலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/100&oldid=580153" இலிருந்து மீள்விக்கப்பட்டது