பக்கம்:துன்பச் சுழல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 துன்பச் சுழல்

அம்மா ஒருவரும் இல்லையா? இருந்தால் அவர்கள் எங்கே இருக்கிருர்கள், சொல். நாங்கள் உன்னே அவர்க ளோடு சேர்க்கின்ருேம். இல்லை, அவர்கள் ஒரு வேளை ஏழையாக இருந்தால் இங்கேயே அழைத்து வந்து வைத்துக் கொள்ளலாம். இதோ எனக்கு இருக்கும் இந்தச் செல்வ மெல்லாம் அனுபவிக்க மணிமேகலை ஒருத்திதான் இருக்கி ருள். நாங்கள் இருவருமே இருக்கும் இந்தப் பெருமாளி கையில் இன்னும் சிலர் வந்து தங்குவதால் ஒன்றும் கெட்டு விடாது. ஆகவே நீ உன் பெற்ருேர் இருக்கும் இடத்தைக் கூறி, பிற தகவலும் சொன்னல் நான் அவர்களை இங்கே கொண்டுவந்து சேர்க்க ஏற்பாடு செய்கிறேன். நீயும் உன் துன்பத்தை எல்லாம் மறந்து இன்பமாக இங்கேயே இருக்க

லாம் என்ருள்,

இந்தக் கேள்விகளை யெல்லாம் கேட்ட் தனியனின் உள்ளம் துன்பத்தால் நிறைந்தது. கண்களில் நீர் பெருக் கெடுத்தது; அழவும் ஆரம்பித்துவிட்டான். அது கண்ட கமலாம்பாள் ஏன் கேட்டோம் என்று எண்ணிவிட்டாள். "அப்பா, நீ ஏன் அதற்காக அழவேண்டும்? அப்படிச் சொல்ல கூடாத கொடுமை உடையதாயிருந்தால் சொல்ல வேண்டாம். ஏதோ தெரிந்தால் உதவி செய்யலாமே என் பதற்காகத்தான் கேட்டேன். உன் விருப்பம்' என்ருள். தனியன் கண்களைத் துடைத்துக் கொண்டான். பேச ஆரம்பித்தான்: 'அம்மா, எனக்கு உங்களைக் காட்டிலும் வேறு உறவினர் யார் இருக்கிருர்கள்? அப்பா, அம்மா, எல் லாம் தாங்கள்தான். ஆகவே உங்களுக்குச் சொல்லாமல் கான் ஒளித்து வைக்க வேண்டியது ஒன்றும் என்னிடத்தில் இல்லை. அம்மா, நான் ஒரு அனதை’ என்று சொல்லும் போது அவன் நெஞ்சம் தழதழத்தது. கண்களில் நீர் கசிங் தது. கமலாம்பாள் கண்ணேத் துடைத்தாள். மேலும் சொன்னன்: 'அம்மா, எனக்குத் தாய் தந்தையர் யார் என்று தெரியாது. என் அன்னேயார் என்னேத் திருவண்ணு மலைப் பிரசவ விடுதியில் பெற்றுவிட்டு இறந்துவிட்டாளாம். அவளுடன் யாரும் விடுதிக்கு வரவில்லையாம். அவளேயும் ஒரு அைைதப் பிணம்போல்தான் அடக்கம் செய்தார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/99&oldid=580152" இலிருந்து மீள்விக்கப்பட்டது