பக்கம்:துன்பச் சுழல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடி வெள்ளி 97

நினைக்கும் கருத்தும், அதற்காகக் கமலாம்பாளும், செல்வநாத ரும் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளும் ஒன்றும் அவ லுக்குத் தெரியா. தெரியாதிருக்க வேண்டுமென்பதே மனத் தலைவியின் நோக்கம். மற்றும் அவனே எங்கும் வெளியில் அனுப்பவும் அவர்கள் மனம் இடங்தரவில்லே. காலும் நன்கு ஆறவில்லே. அப்படி ஆறிவிட்டாலும் அவனே வெளியே அனுப்பினல் கள்வர்களால் இன்னல் வரும் என எண்ணிள்ை கமலாம்பாள். வீட்டின் சோலையிலும் கூட, கோடிகளில் செல்லவிடுவதில்லை. மாளிகைக்கு அண்மையிலே அவன் எப்போதும் இருப்பான். அவனுடன் மணிமேகலை, தான் பள்ளிக்கூடம் போகும் வேளை தவிர மற்ற வேளைகளில் இருப்பாள். அவனும் தான் முன் அனதை விடுதியில் விட்ட படிப்பைத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினன். அவன் படிப்பு வளர வழி செய்துகொடுத்தாள் கமலாம்பாள். மணிமேகலைக்கு அவனிடம் ஒரு தனிப்பட்ட அன்பு உண்டா யிற்று; அவனுக்கு வேண்டிய உதவிகளே யெல்லாம் செய்து கொண்டு அவன் பக்கத்திலே இருப்பாள். மற்றப் பணியாளர் களோ அவர்கள் இட்ட வேலையைச் செய்யக் காத்திருந் தார்கள். இந்த நிலையில் அைைதயாகி-பின் கள்வனகித் திருடவந்த தனியன் அன்று அந்த மாளிகைக்கே தலைவனைப் போல மதிக்கப்பட்டான். துன்பச் சுழலை ந்ேதிவிட்டான் தனியன். -

தனியன் தன் துன்ப நாட்களை யெல்லாம் மறந்து அன்றைய இன்ப நெறியில் தன்னையும் மறந்திருந்த நாட்களில் ஒரு நாள் கமலாம்பாள் அவனே மிக அன்போடு உபசரித்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே அவனுக்கு வேண் டிய பழம் முதலியன திருத்திக் கொடுத்துக் கொண்டிருந் தாள். மெதுவாக அவனைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள். "அப்பா, நீ மிகவும் நல்லவனுக இருக்கிருய். உன்னிடம் ே வந்த நாள் முதல் கேட்கலாம் என்று எண்ணியதை இன்று கேட்கப் போகிறேன். உன்னைப் பார்த்தாலும் ஏதோ ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் போல் தெரிகிறது. நீ எப்படி இந்தக் கள்வர் கூட்டத்தில் ஒருவனய்ை? உனக்கு உற்ருர் உறவினர் ஒருவரும் இல்லையா? உனக்கு அப்பா

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/98&oldid=580151" இலிருந்து மீள்விக்கப்பட்டது